For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி.... ஏமாற்றுக் கும்பல் கைது: வீடியோ

மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி செய்த கோவை பீளமேட்டைச் சேர்ந்த ஶ்ரீநாத் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மற்றும் விஜயகுமார் ஆகியோரை மத்திய கு

By Suganthi
Google Oneindia Tamil News

சேலம்: சேலம் எடப்பாடியைச் சேர்ந்த ரவிசுதன் என்பவரிடம் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருகிறேன் என மோசடியில் ஈடுபட்ட ஶ்ரீநாத் என்பவரை மத்திய குற்றப் பிரிவி போலீசார் தேடி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட ஶ்ரீநாத் மனைவி மற்றும் விஜயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் எடப்பாடியைச் சேர்ந்தவர் ரவி சுதன். இவர் தன் மகனுக்கு எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாகக் கூறிய கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஶ்ரீநாத் என்பவரிடம் முன்பணமாக 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஶ்ரீநாத் எம்.பி.பி.எஸ் சீட்டுக்கு மொத்தம் 76 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.

 MBBS seat cheat case in coimbatore and accused escaped

பணத்தைப் பெற்றுக்கொண்ட ஶ்ரீநாத், பாண்டிச்சேரி ஜிப்மரில் சீட் வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார். ஆனால், நீட் தேர்வில் ரவிசுதன் மகனுக்கு பதில் வேறு ஒருவரின் போட்டோ ஒட்டிய ஹால் டிக்கட் கொடுத்து தேர்வு எழுதச் சொல்லியிருக்கிறார் ஶ்ரீநாத். ஆனால் ரவி சுதன் ஆள் மாறாட்டம் செய்து பரீட்சை எழுதினால் பிரச்சனை உண்டாகுமென்பதால் தன் மகனை பரீட்சை எழுத வைக்கவில்லை.

ஆனால் கொடுத்த முன்பணத்தைக் கேட்டதற்கு, ஶ்ரீநாத் இழுத்தடித்துள்ளார். இதையடுத்து ரவிசுதன் கோவை மத்திய குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தெரிந்ததும் ஶ்ரீநாத் தலைமறைவாகிவிட்டார். இந்த மோசடியில் உடந்தையாக இருந்த ஶ்ரீநாத்தின் மனைவி மற்றும் விஜயகுமார் ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

English summary
Srinath who belong to Coimbatore involved in money cheat case escaped and his wife and close associate arrested by central crime police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X