For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை மருத்துவக் கல்லூரியில் மெடிக்கல் கவுன்சில் குழு திடீர் ஆய்வு

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் டெல்லியை சேர்ந்த இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர் திடீரென ஆய்வு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 150 இடங்கள் உள்ளன. இநத கல்வியாண்டில் இதை 250 ஆக உயர்த்த மருத்துவ கல்லூரி சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான இடங்களை 250 ஆக உயர்தத மத்திய கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை. இதனால் 150 இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடந்தது. புதிய கல்வியாண்டுக்கான படிபபுகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து இந்திய மருத்துவ கவுன்சிலைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினர் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென நெல்லை அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு வந்தனர்.

ஆந்திரா மாநிலம் விஜயவாடா மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் இககுழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழுவினர் நெல்லை மருத்துவ கல்லூரியின் அனைத்து பிரிவுகளுக்கும் போய் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள், மருத்துவ பரிசோதனை கூடம், ஆகியவற்றை பாரவையிடடு அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

மாணவர்களுக்கு கற்று தர போதிய பேராசிரியர்கள், டாக்டர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். ஆய்வு முழுவதையும் அவர்கள் வீடியோவில் பதிவு செய்தனர். இந்த திடீர் ஆய்வால் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
A team from MCI visited Nellai medical college and had an inspection there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X