For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி மா.செ பெரியசாமி மரணத்தால் திமுக நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

மறைந்த திமுகவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி உடலுக்கு மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த திமுகவின் என்.பெரியசாமி உடலுக்கு தலைவர்கள் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டமாக இருந்தது முதல் தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது வரை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் என்.பெரியசாமி. 6 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்ததால் அவ்வபோது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் பெரியசாமி தற்போது தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தார்.

MDMK Chief Vaiko says he lost his best friend Periyasamy

வயது மற்றும் உடல்நலக்குறைவு இருந்தாலும் கட்சிப் பணிகளில் அவரது வேகம் எப்போதும் குறைந்ததேயில்லை என்கின்றனர் கட்சியினர். அதிமுவில் இருந்து வந்த அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்த போதும், அவரால் கட்சியைப் பொறுத்தவரை பெரியசாமியை மீறி எதையும் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் இன்று அவர் காலமானதையடுத்து அவர் வகித்து வந்த மா.செ பதவி அனிதா ராதாகிருஷ்ணன் அல்லது பெரியசாமியின் மகள் கீதாஜூவனுக்கு வழங்கப்படுமா என்பதே அடுத்த பரபரப்பாக இருக்கிறது.

இதனிடையே சென்னை சேத்துபட்டில் மரணமடைந்த என்.பெரியசாமியின் உடல் போரூரிலுள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, சகோதரி செல்வி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் என்.பெரியசாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். 26 ஆண்டுகள் நட்பில் இருந்த பெரியசாமியின் மரணம் பேரிழப்பு என்றும் அவரின் மரணம் தெற்குச் சீமைக்கு பேரிழப்பு என்றும் கைவோ புகழாரம் சூட்டியுள்ளார்.

English summary
DMK working president Stalin with his family members and MDMK chief Vaiko paid tribute to DMK senior leader N.Periyasamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X