For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தல்... நிர்வாகிகளிடம் பொறுப்பை ஒப்படைத்த வைகோ

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் எங்கெங்கு போட்டியிடலாம் என்பதை நீங்களே முடிவு செய்து என்னிடம் பட்டியல் கொடுங்கள் என மாவட்டச் செயலாளர்களுக்கு வைகோ அறிவுறுத்தியுள்ளாராம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த இரண்டு மாதகாலமாக உடல்நலமின்மையால் வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட வைகோ சற்று அயர்வுடன் தான் காணப்பட்டார்.

திருவள்ளுவருக்கு காவி வண்ண உடை.. சர்ச்சையில் சிக்கிய தமிழக பாஜக.. கடும் கொந்தளிப்பு!திருவள்ளுவருக்கு காவி வண்ண உடை.. சர்ச்சையில் சிக்கிய தமிழக பாஜக.. கடும் கொந்தளிப்பு!

கர்ஜனை

கர்ஜனை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை பொறுத்தவரை மைக் பிடித்துவிட்டார் என்றால் சிங்கம் தனது பிடரியை உலுப்புவது போல், தனது கருப்புத்துண்டை இரண்டு தோள்பட்டைகளில் இருந்தும் பின்னுக்கு இழுத்து விட்டு உச்சபட்ச குரலில் கர்ஜிப்பார்.

நிகழ்ச்சிகள் ரத்து

நிகழ்ச்சிகள் ரத்து

வைகோவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மாத காலம் வெளிநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை கூடுமான வரை தவிர்த்தார். இடைத்தேர்தலுக்காக 2 நாட்கள் பிரச்சாரம், மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அஞ்சலி ஆகிய நிகழ்ச்சிகள் மட்டுமே அவர் கலந்துகொண்ட பொதுநிகழ்ச்சிகள் ஆகும்.

ஆலோசனை

ஆலோசனை

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் மதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பலரும் வைகோவிடம், உங்கள் உடல்நலனை பாத்துக்கங்க என உருகியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர், தாம் நன்றாகத் தான் இருப்பதாகவும், அதைப்பற்றி கலவலைப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

பட்டியல் கொடுங்க

பட்டியல் கொடுங்க

உள்ளாட்சித் தேர்தலில் எங்கெங்கு போட்டியிடலாம், எந்த நகராட்சி நமக்கு சாதகமான இருக்கும் என்பதை மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகளோடு கலந்து பேசி இந்த மாதம் இறுதிக்குள் பட்டியல் கொடுங்க.. அதிலிருந்து இறுதி செய்து திமுகவிடம் கேட்கிறேன் எனக் கூறினாராம்.

English summary
mdmk general secretary vaiko to discuss with party executives about local body election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X