For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வைகோ கோரியதற்கு வாழ்த்து

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை : ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி கேட்டும், தமிழ் இனப்படுகொலை நடத்திய கொடூரமான சிங்கள இனவாத அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கவும், ஈழத்தமிழர்களுக்கு விடியல் கிடைக்க தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றி பெரும் வரலாற்றுக் கடமையை மேற்கொண்ட வைகோவுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 3:இலங்கையிலிருந்து 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஈழத்தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் பறிக்கப்பட்டு, தங்கள் மொழி இனப் பண்பாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டதையும், ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக தந்தை செல்வா தலைமையில் நடத்திய அறவழிப் போராட்டங்களை சிங்கள அரசு மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கியதையும் வைகோ ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் எடுத்துரைத்தார். ஈழத்தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைகளை நிலைநாட்ட ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குத் தள்ளப்பட்டு, மாவீரர் திலகம் பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கம் போராடியதையும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் ராஜபக்சே அரசு அப்பாவி தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்ததையும் வைகோ எடுத்துரைத்து ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட ஐ.நா. மன்றம் தமிழ் ஈழம் அமைவதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்று வைகோ முழங்கினார்கள். ஐ.நா.மன்றத்தில் ஈழத் தமிழர்களின் நியாயத்தை

MDMK says thanks to M.K.Stalin for his condemn for Singala's attack on Vaiko

எடுத்துரைத்து பன்னாட்டுப் பிரதிநிதிகளின் ஆதரவை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் திரட்டிய வைகோ மீது சிங்கள அரசு வன்மம் கொண்டது. அதனால்தான் ஜெனிவா மனித உரிமைகள் கவுன்சிலில் வைகோ உரையாற்றியதைப் பொறுக்க முடியாமல், கைக்கூலிகளை ஏவி தாக்க முயன்றனர்.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த சரத் வீரசேகரா உள்ளிட்ட சிங்களவர்கள் வைகோவைச் சூழ்ந்துகொண்டு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் பேசுவதை தடை செய்ய வேண்டும் என்று முயற்சித்தனர். ஐ.நா. மன்றத்திலேயே ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கும் வகையில் வைகோவை தாக்குவதற்கு கைக்கூலிகளை ஏவிவிட்ட சிங்கள அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

தீர்மானம் 4: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு உரையாற்றிய வைகோ மீது தாக்குதல் நடத்த தமிழ் இனப்படுகொலை நடத்திய முன்னாள் இராணுவத்தினர் சிலரை சிங்கள அரசு ஏவி விட்டது. இந்திய நாட்டின் குடிமகனும், 24 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றியவருமான வைகோவை தாக்க முயன்ற சிங்கள அரசுக்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவிக்காதது வருத்தத்திற்கு உரியது ஆகும்.

MDMK says thanks to M.K.Stalin for his condemn for Singala's attack on Vaiko

இனியாவது மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு உரிய முறையில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5: ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று கண்ணீரும், இரத்தமும் கலந்த ஈழத்தமிழர்களின் துயர வரலாற்றை எடுத்துக் கூறி நீதி கேட்ட பொதுச்செயலாளர் வைகோ மீது தாக்குதல் நடத்த சிங்கள முன்னாள் இராணுவத்தினரை இலங்கை அரசு ஏவி விட்டது. சிங்கள அரசின் இச்செயலைக் கண்டித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க் கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

MDMK says thanks to M.K.Stalin for his condemn for Singala's attack on Vaiko
English summary
MDMK thanked CM Edappadi Palanisamy, DMK Working president M.K.Stalin for their condemns on the attack of singala's on Vaiko in Geneva.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X