For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவை தெறிக்க விடும் வைகோ.. திமுக, மதிமுக இரு முனைத் தாக்குதலால் செம டென்ஷன்!

பரூக் அப்துல்லா விவகாரத்தில் வைகோ தீவிரமாக இறங்கி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vaiko Angry Speech about Kashmir | காஷ்மீர் விவாதத்தில் வைகோ ஆக்ரோஷ பேச்சு- வீடியோ

    சென்னை: திமுகதான் நம்மை குடைந்து வருகிறது என்றால்.. மதிமுகவும் நம்மை ரவுண்டு கட்டி அடிக்கிறதே என்று பாஜக பதறி போய் உள்ளதாம்! ஆம்.. மீண்டும் பழையபடி கர்ஜிக்க ஆரம்பித்துவிட்டார் வைகோ!
    டெல்லிக்கு திமுக எம்பிக்கள் போனதிலிருந்தே மத்திய அரசுக்கு பெரும் குடைச்சல் ஏற்பட்டு வருகிறது. பார்லிமென்ட்டில் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தது. பிறகு காஷ்மீர் விவகாரத்தில் டிஆர் பாலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    இப்படி ஒரு போராட்டம் நடத்தியபோதே பாஜக, உஷாராக ஆரம்பித்துவிட்டது. மற்ற மாநிலங்கள் அவ்வளவாக எதிர்ப்பு காட்டாத நிலையில், எங்கியோ இருக்கும் தமிழ்நாட்டு திமுக எதற்காக டெல்லி வரை வந்து, அதுவும் காஷ்மீர் விவகாரத்துக்காக போராட வேண்டும் என்ற கேள்வியும், சந்தேகமும் பாஜகவுக்கு எழவே செய்தது.

     பொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி! பொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி!

    வழக்குகள்

    வழக்குகள்

    அதனால்தான் திமுகவை டேமேஜ் செய்யும் வேலைகளில் இறங்க உள்ளதாகவும், அதற்காக திமுக எம்பிக்களின் பழைய ஊழல், கிரிமினல் சம்பந்தப்பட்ட ஃபைல்களை தூசி தட்டி எடுக்க போவதாகவும் அரசல்புரசலாக செய்திகள் வந்தன.

    வைகோ

    வைகோ

    இது இப்படி இருக்க.. வைகோ ஒரு பக்கம் இறங்கிவிட்டார். ஏற்கனவே 24 வருஷத்துக்கு பிறகு திரும்பவும் எம்பியாக சென்ற முதல் நாள் வைகோ பேசியதை பார்த்து பார்லிமென்ட்டே அரண்டு போய் விட்டது. இப்போது ஃபரூக் அப்துல்லா விவகாரத்தை வைகோ மிக தீவிரமாக கையில் எடுத்துள்ளார்.

    வீட்டு சிறை

    வீட்டு சிறை

    "ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை, அவர் நல்லாதான் வீட்டில் இருக்கிறார். வீட்டுச் சிறையில் இல்லை" என்று நாடாளுமன்றத்தில் சொன்னார் அமித்ஷா. ஆனால், தன்னை வீட்டுக்காவலில் மத்திய அரசு வைத்திருப்பதாக வீட்டு மாடியிலிருந்து மீடியாக்களிடம் பரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

    மனு

    மனு

    இதையடுத்துதான், வைகோ தன் ஆவேச கேள்விகளை முன் வைத்தார். ஃபரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார்? அவரை நேருக்கு நேர் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

    எங்கே?

    எங்கே?

    இதற்கு காரணம், ஃபருக் அப்துல்லாவின் 40 ஆண்டுக்கால உயிர் நண்பர் வைகோ ஆவார். நடந்து முடிந்த மதிமுகவின் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் அவர் கலந்து கொள்வதாககூட ஒப்புதல் தந்திருந்தார். ஆனால் அழைப்பிதழை தரலாம் என்றால் அவர் எங்கே இருக்கிறார், என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியாததால், வைகோ ஹேபியஸ் கார்பஸ் மூலம் கோர்ட்டை அணுகினார்.

    திணறல்

    திணறல்

    வைகோவின் இந்த செயலை பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆட்கொணர்வு மூலம் வழக்கின் விசாரணை இனி இன்னும் என்னென்ன தகவல்களை வெளிகொண்டு வர போகிறதோ தெரியவில்லை. ஆனால் ஃபரூக் அப்துல்லா விவகாரம் வெளியே வர காரணமாக இருக்க போவது என்னமோ வைகோவாகதான் இருக்க முடியும்! அதனால்தான் மீண்டும் கர்ஜிக்க துவங்கி உள்ள வைகோவின் நடவடிக்கையை கண்டு பாஜக திணறுவதாக கூறப்படுகிறது.

    English summary
    Vaiko says about Faroog abdullah and he has filed Habeas corpus in supreme court
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X