For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக ஊடகங்கள் இந்துக்களுக்கு எதிராக உள்ளது.. இதுபோன்றவற்றை விவாதிக்க வேண்டியதுதானே? எச் ராஜா கோபம்

தமிழக ஊடகங்கள் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கமல் கட்சியின் சின்னத்திற்கு விளக்கம் கொடுத்த எச்.ராஜா- வீடியோ

    சென்னை: தமிழக ஊடகங்கள் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். முதியவர்களை கடத்தும் கிறிஸ்த்தவ கருணை இல்லம் குறித்து ஏன் விவாதிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஆதரவற்ற முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஆனால் இந்த கருணை இல்லத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து போலீஸிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

    போலி ஆம்புலன்ஸ்

    இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில், ஆம்புலன்ஸ் போல வடிவமைக்கப்பட்ட டாடா ஏஸ் வாகனத்தில் மூதாட்டி ஒருவர் கட்டாயப்படுத்தி கடத்திச் செல்லப்பட்டார்.

    பெண் சடலம்

    பெண் சடலம்

    இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் வாகனத்தை மடக்கிப்பிடித்தனர். அப்போது அந்த போலி ஆம்புலன்சில் பெண் சடலத்துக்கு அருகே முதியவர் ஒருவர் படுக்க வைக்கப்பட்டிருந்தார். மேலும் ஒரு முதியவர் அந்த வாகனத்தில் கடத்தப்பட்டார்.

    அடக்கம் செய்யப்படுவதில்லை

    அடக்கம் செய்யப்படுவதில்லை

    செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்தின் சமையலுக்கான காய்கறி மூட்டைகளுடன் சடலம் கொண்டு செல்லப்பட்டதோடு முதியவர்களும் அழைத்து செல்லப்பட்டனர். வெளி நாட்டில் இருந்து வரும் நிதியை கொண்டு நடத்தப்படும் இந்த தொண்டு நிறுவனத்தில் மரணம் அடையும் முதியவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது.

    வெளிநாடுகளுக்கு கடத்தல்

    வெளிநாடுகளுக்கு கடத்தல்

    மாறாக ஒரு தொட்டிக்குள் புதைத்து , சில நாட்கள் கழித்து அவர்களது எலும்புகளை எடுத்து பதப்படுத்தி அதனை வெளிநாடுகளுக்கு கடத்துவதாக கூறப்படுகிறது. சட்டரோதமாக நடைபெறும் இந்த வேலை குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விவாதிக்க வேண்டியதுதானே?

    இந்நிலையில் இந்த விவகாரத்தை தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என எச் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ள எச் ராஜா தமிழக ஊடகங்கள் இந்துக்களுக்கு எதிராகதான் செயல்படுகின்றன என்றும், இந்த கிறித்தவ அமைப்பு மேற்கொள்ளும் சட்டவிரோத சம்பவம் குறித்து தமிழக ஊடகங்கள் விவாதிக்க வேண்டியது தானே என்றும் எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    BJP national secretary H Raja has said that the media in TN is totally prejudiced against hindus. And also he said it will never debate issues like this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X