For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”மருத்துவ காப்பீடு உடல் நலமற்றவருக்கு மட்டுமே என்பது தவறான கருத்து”

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவக் காப்பீடு என்பது உடல்நலம் பாதிக்க பட்டவர்களுக்கு மட்டும் அல்ல.அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் இந்த காப்பீட்டுத் திட்டம்.

காப்பீட்டுத் துறையில்தான் இந்த "தவறான தேர்வு" என்பது ஏற்படுகிறது. ஆயுள் அல்லது மருத்துவக் காப்பீடு நீங்கள் எடுப்பதாக வைத்துக்கொள்வோம். உங்கள் உடல் நலம் பற்றிய முழுவிபரம் தெரிந்தவர் நீங்கள் மட்டுமே. சராசரி மனிதர்களைவிட அதிக சுகாதார பிரச்சினைகள் உள்ளவர் நீங்கள் என்றால் அதனை மறைத்து உடனடியாக ஆயுள் அல்லது மருத்துவக் காப்பீடு எடுப்பீர்கள்.

Medical insurance is essential for all the persons…

உங்களுக்கு சராசரி மனிதனைவிட அதிக ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தோன்றினால் நீங்கள் உடனடியாக ஆயுள் அல்லது மருத்துவக் காப்பீடு எடுப்பதைத் தவிர்த்து விடுவீர்கள். இவ்வாறு எல்லாரும் செய்ய ஆரம்பித்தால் காப்பீடு நிறுவனத்தில் அதிக உடல்நலம் குன்றியவர்கள் மட்டுமே காப்பீடு எடுப்பார்கள்.

ஆனால் உண்மையில் நல்ல உடல் நலம் உள்ளவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் என்ற இரு குழுக்களும் காப்பீடு திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே காப்பீடு நிறுவனம் காப்பீட்டை எல்லாருக்கும் பகிர்ந்தளித்து ஓரளவிற்கு லாபத்துடனும் வியாபாரத்தை நடத்த முடியும். உடல் நலம் குன்றியவர்களுக்கு மட்டுமே காப்பீடு எடுப்பது என்பது "தவறான தேர்வு" எனப்படும்.

இதனைத் தவிர்க்க காப்பீடு நிறுவனம், மருத்துவ பரிசோதனை, அதிக பிரீமியம் தொகை என்ற வகையில் செலவுகளை அதிகப்படுத்தவேண்டியுள்ளது.

எனவே காப்பீடு என்பது ஆரோக்கியமான மனிதரோ அல்லது உடல்நிலை பாதிக்கப் பட்டவரோ எல்லாருக்கும் பொதுவானதே.

English summary
Medical and life insurance investment is not only suitable for sick persons. It will also gain for healthy people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X