For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி வாரியம் அமைக்கக்கோரி மருந்தகங்கள் போராட்டம்.. தமிழகம் முழுவதும் 30000 மருந்து கடைகள் மூடல்

வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மருந்தகங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மருந்தகங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி விவகாரம், காவிரி ஸ்கீம் என குறிப்பிடப்பட்டிருந்ததால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தவிர்த்தது.

Medical shops also protest demanding Cauvery management board

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து மருந்தகங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 30,000 மருந்து கடைகள் மூடப்பட்டிருக்கும் என மருந்து வணிகர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளன.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்து கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் போராட்டத்தால் அவசர தேவைக்கு 044-28191522 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Medical shops also protest demanding Cauvery management board. Across Tamil nadu over 30,000 medical shops closed by supporting protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X