• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

BREAKING NEWS: காஷ்மீர் அரசியலில் திடீர் பரபரப்பு- பாஜக ஆதரவு வாபஸ்- முதல்வர் மெகபூபா ராஜினாமா!

By Shyamsundar
|

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி அரசுக்கான ஆதரவை பாஜக திடீரென விலக்கிக் கொண்டது. இதையடுத்து முதல்வர் மெகபூபா முஃப்தி தமது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இதனால் அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலாகிறது.

Newest First Oldest First
7:42 PM, 19 Jun
ஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை?

உள்துறை அமைச்சகம் ஒப்புதல் கிடைத்தவுடன் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வரும்- ஆளுநர் வோரா

ஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை ஜம்மு- காஷ்மீர் குறித்து இன்று அறிவிப்பு வரலாம் என தகவல்

6:08 PM, 19 Jun
சேலம் அருகே சீரிக்காட்டில் நிலத்தை அளந்ததை பார்த்த பெண் மயக்கம்

8 வழிசாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது

சீரிக்காட்டில் ஒரு குடும்பத்தின் வீடு, நிலம், கிணறு கையகப்படுத்தப்பட்டது

ஒரு குடும்பத்தின் வீடும் விளைநிலமும் திடீரென கையகப்படுத்தப்பட்டதால் அதிர்ச்சி

தலைமுறைகளாக வாழ்ந்த வீடும் நிலமும் பறிபோவதால் தனலட்சுமி என்ற பெண் மயக்கம்

நிலத்தில் முட்டுக்கல் ஊன்றிய போது ஒட்டுமொத்த குடும்பமே கதறி அழுதது

5:50 PM, 19 Jun
வேல்முருகன் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுதலை
5:33 PM, 19 Jun
கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால் அதிர்ச்சியில்லை - மெஹபூபா

வேறு கூட்டணிக்கு முயலவில்லை - மெஹபூபா

பதவிக்காக கூட்டணி அமைக்கவில்லை - மெஹபூபா

5:00 PM, 19 Jun
ஜம்மு - காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

ஆலோசனையில் அஜித் தோவல் பங்கேற்பு

மத்திய உள்துறை செயலரும் ஆலோசனையில் பங்கேற்பு

4:49 PM, 19 Jun
காஷ்மீர் ஆளுநரை சந்தித்து ஆலோசித்த ஒமர் அப்துல்லா
br /> ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒமர் அப்துல்லா வலியுறுத்தல்br />br /> தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை என அறிவிப்பு
3:50 PM, 19 Jun
"ஜெயலலிதா கொள்ளையடித்த பணம்..." என்று வாய்தவறி பேசிய அமைச்சர்

சிக்கலில் சிக்கினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

3:41 PM, 19 Jun
மெகபூபா முப்திக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் - உமர் அப்துல்லா
3:12 PM, 19 Jun
ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி ராஜினாமா செய்தார்

பாஜக ஆதரவை வாபஸ் பெற்றதால் மெஹபூபா அரசு பெரும்பான்மையை இழந்தது

இதையடுத்து பதவி விலகினார் மெஹபூபா

3:01 PM, 19 Jun
பாஜக-பிடிபி கூட்டணி பிளவுக்கு பின்னணியில் அஜித் தோவல்?

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்-அமித்ஷா இன்று திடீர் சந்திப்பு

அஜித் தோவல் சந்திப்பு முடிந்த சில மணி நேரங்களில் கூட்டணி முறிவு அறிவிப்பு

2:52 PM, 19 Jun
18 எம்எல்ஏக்களும் ஓரணியில் உள்ளோம் - தங்கத் தமிழ்ச்செல்வன் பேட்டி

ஒருவரை கூட எடப்பாடி பழனிச்சாமியால் இழுக்க முடியாது - தினகரன் தரப்பு

ஒருவரை இழுத்தாலும் கூட நாங்கள் மொத்தமாக எடப்பாடி பக்கம் செல்ல தயார் - தங்கத் தமிழ்ச்செல்வன் சவால்

2:35 PM, 19 Jun
காஷ்மீரில் பிடிபி-பாஜக கூட்டணி உடைந்தது

காஷ்மீரில் பிடிபிக்கான பாஜக ஆதரவு வாபஸ்

காஷ்மீரில் மெகபூபா அரசு கவிழ்கிறது

2:26 PM, 19 Jun
காஷ்மீரில் பிடிபி-பாஜக கூட்டணி உடைந்தது

காஷ்மீரில் பாஜக-பிடிபி கூட்டணி முறிவு?

கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியதாக தகவல்
1:51 PM, 19 Jun
சேலத்தில் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு- மூதாட்டியை கைது செய்த போலீஸ்
1:29 PM, 19 Jun
பெருந்துறை மார்க்கெட் பஸ்ஸில் இந்தியில் பெயர் பலகை

நடத்துநரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு

விதிமுறை மீறி செயல்பட்டதாக நடத்துநர் சீனிவாசனை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவு

வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் இந்தியில் பெயர் பலகை

12:46 PM, 19 Jun
தென் தமிழக கடலோரத்தில் கடல் சீற்றம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமான் கடற்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - வானிலை மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் கடல் காற்று அதிகமாக இருக்கும் - வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

11:53 AM, 19 Jun
தமிழக மீனவர்கள் 9 பேர் ஈரான் அருகே நடுக்கடலில் தத்தளிப்பு

சென்னையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் தத்தளிப்பு

அவசர அழைப்பு வந்ததை தொடர்ந்து மீனவர்களை மீட்க கடலோர காவல் படை விரைவு

11:40 AM, 19 Jun
தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு திரும்ப ஆயத்தம்- நமது அம்மா நாளேடு

முதல்வர் எடப்பாடியாரின் அழைப்பைத் தொடர்ந்து அதிமுகவுக்கு திரும்ப ஆயத்தம்

தங்க தமிழ்ச் செல்வனுக்கு அதிமுகவின் 'நமது அம்மா' நாளேடு பாராட்டு

11:33 AM, 19 Jun
பெருந்துறை சிப்காட் பேருந்தில் இந்தி பெயர் பலகை வைத்த கண்டக்டர் சஸ்பென்ட்

பெருந்துறை சிப்காட் பேருந்தில் இந்தி பெயர் பலகை அகற்றம்

9:36 AM, 19 Jun
திண்டுக்கல்- பொள்ளாச்சி 4 வழி சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

பழனி அருகே புஷ்பத்தூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

புஷ்பத்தூர் கிராமத்தில் 60 வீடுகள், கோயில், சமுதாய கூடங்கள் பாதிக்கும் என அச்சம்

9:34 AM, 19 Jun
குன்னூர் அருவங்காடு வெடிமருந்து ஆலையை மூட எதிர்ப்பு

வெடிமருந்து ஆலையை மூட எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

9:16 AM, 19 Jun
பீகாரில் குளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் பலி அராரியா பகுதியில் கார் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
8:35 AM, 19 Jun
சேலம் மக்களை கைது செய்தால் போராட்டம் வெடிக்கும் - ஸ்டாலின்

ஆச்சான்குட்டைப்பட்டி, புதூரில் நில அளவீட்டை எதிர்த்த மக்களை போலீஸ் கைது செய்தது

சாலைத் திட்டத்தின் பாதிப்பு பற்றிப் பேசினாலே கைதா? - ஸ்டாலின்

8:35 AM, 19 Jun
சேலம்-சென்னை சாலை மக்களின் கருத்துகளை அறியும் முன்பே போடப்படுகிறது - ஸ்டாலின்

அவசரமாக நிலங்களை அளவிடுவது கண்டனத்திற்குரியது - ஸ்டாலின்

மக்களை தேவையில்லாமல் அரசு கைது செய்கிறது - ஸ்டாலின்

8:18 AM, 19 Jun
1000 பழனிசாமிகள் அதிமுகவில் வரமுடியும், ஆட்சி நிலையாக இருக்கும்

காவிரி உரிமையை மீட்க தமிழகத்தில் 38 ஆண்டு காலம் போராட்டம் நடந்தது

அதிமுக அரசு நடத்திய சட்டப்போராட்டத்தால் மட்டுமே நல்ல தீர்வு கிட்டியுள்ளது

மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு

8:17 AM, 19 Jun
அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் சதி செய்தார் - முதல்வர் பழனிச்சாமி

திமுக தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறது - முதல்வர்

இருவரும் சேர்ந்துதான் ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார்கள்- முதல்வர்

தற்போது இருக்கும் ஆட்சி நிலையாக தொடரும்

8:10 AM, 19 Jun
ஆலை கழிவுகளை அகற்ற ஸ்டெர்லைட் பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் - வேதாந்தா

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்

நேற்று காலையில் இருந்து தீயணைப்பு படையினர், அதிகாரிகள் கழிவு நீக்கி வருகிறார்கள்

காப்பர் கழிவுகளை அகற்ற முடியாமல் திணறி வருகிறார்கள்

8:10 AM, 19 Jun
ஆந்திரா: திருப்பதி வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

பூபால்காலனியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவின் தேடுதல் வேட்டையில் பறிமுதல்

மொத்தம் 140 செம்மரக் கட்டைகள் பறிமுதல்

காவல்துறையினரை கண்டதும் 100க்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Sterlite Copper Acid leakage: A special team cleaning the wastages from the factory.Cleaning of the wastages continuous for 2nd day.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more