For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீரா குமார் தோற்ற செய்தியை காண்பித்த லோக்சபா டிவி தலைமை அதிகாரி நீக்கம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் சபாநாயகர் மீராகுமார் தோற்ற செய்தியை முழு விவரத்துடன் காட்டிய லோக்சபா டிவி தலைமை அதிகாரி ராஜிவ் மிஸ்ராவை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Meira Kumar sacks LS TV CEO Mishra

மே 30ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் லோக்சபா தொலைக்காட்சி தலைமை அதிகாரி ராஜிவ் மிஸ்ராவின் பதவிக்காலம் மே 31ஆம் தேதியோடு முடிவடைகிறது என்று சபாநாயகர் மீரா குமார் குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பீகார் மாநிலத்தின் சசாராம் தொகுதியில் சபாநாயகர் மீரா குமார் தோற்ற செய்தியைக் காண்பித்ததற்காக தான் நீக்கப்பட்டதாக ராஜிவ் மிஸ்ரா செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளார்.

"சசாராம் தொகுதியில் தோற்ற செய்தியை காண்பித்த பிறகே மேடம் என் மீது கடும் கோபத்தில் இருந்ததாக உடன் பணியாற்றியவர்கள் என்னிடம் தெரிவித்தனர்" என்று ராஜிவ் மிஸ்ரா கூறியுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று ராஜிவ் மிஸ்ராவின் ஒப்பந்தம் அடுத்த உத்தரவுகள் வரும் வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் அவரது தலைமையின் கீழ் லோக்சபா தொலைக்காட்சி லாபத்துடன் இயங்கியதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Days before her exit as Speaker Meira Kumar has given the Lok Sabha TV CEO his marching orders with immediate effect without citing reasons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X