For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஆய்" போறதுக்கும் ஆதார் கார்டு காட்டணுமோ.. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!

பள்ளிகளில் மதிய உணவு பெற ஆதார்கார்டு தேவை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இதற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிகளில் மாணவர்கள் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட சலுகைகளைப் பெற ஆதார்கார்டு அவசியமாக்கப்பட்டுள்ள நிலையில், மதிய உணவு பெறவும் ஆதார்கார்டு தேவை என்று கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் மத்திய அரசை வறுத்து எடுத்து வருகின்றனர்.

ஏழ்மை காரணமாக பள்ளிக்கு வராத மாணவர்களுக்காக மதிய உணவு திட்டத்தை தொடங்கினார் அப்போதய முதல்வர் காமராஜர். அதை சத்துணவு திட்டமாக மாற்றினார் எம்ஜிஆர். 1989ல் கருணாநிதி ஆட்சியில் சத்துணவுடன் முட்டை போடப்பட்டது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் கலவை சாதங்கள், கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, தினசரி முட்டை அளிக்கப்படுகிறது. இதில் அதிக அளவு ஊழல் நடைபெறுவதாக புகார் எழுந்தது. சத்துணவு சாப்பிடாத மாணவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு அதற்கான பொருட்களை சத்துணவில் பணியாற்றும் ஊழியர்களே எடுத்துச்செல்கின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.

இதனிடையே பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலவித கருத்துக்களை மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

காமராஜரும் மோடியும்

மதிய உணவு போட்டு மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தார் காமராஜர். அதே நேரத்தில் மதிய உணவு சாப்பிட வரும் மாணவர்களிடம் ஆதார் கேட்டு இம்சிக்கிறார் மோடி என்று வலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுக்கும் ஆதார் கார்டு காட்டணுமோ?

மதிய உணவு சாப்பிட மட்டும்தானா? பாத்ரூம் போவதற்கும் ஆதார் காட்ட வேண்டுமா? என்றும் கேட்கிறார் ஒரு வலைஞர்.

கோவிலுக்குள் நுழையக்கூடாது

ஆதார் கார்டு இல்லாதவர்கள் கோயிலுக்கு வரக்கூடாதுனு சொல்லுங்கடா என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். திருப்பதி செல்லும் பக்தர்கள் ஆன்லைனின் பதிவு செய்ய ஆதார் கார்டு அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

கக்கூஸ் போறதுக்கு கூட

இனி மக்கள் கழிவறை செய்வதற்கு கூட ஆதார் கார்டு அவசியம் என்று கேட்பாளர்கள் என்று வேதனையுடன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

டிஜிட்டல் இந்தியா

பெட்ரோல் விலை உயர்வு ஒரு பக்கம் வாட்டி எடுக்கிறது. டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் மக்களை தவிக்க விடும் மத்திய அரசு மதிய உணவுக்கும் ஆதார் கார்டு கேட்பது அநியாயம் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

அடையாளமற்றவர்கள்

நம்முடைய அடையாளத்தை கூட ஆதார் கார்டு மூலம் நாமே அடிக்க நிரூபிக்க வேண்டியிருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

English summary
Memes for Adhaar card in Twitter, central government mandating that children will not be served mid-day meals at school without Aadhaar cards from June.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X