For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீலம் டாய்லெட்டுக்கு... சிவப்பு பாத்ரூம் கழுவ #SaveTamirabarani

பெப்சி, கோக் நிறுவனங்கள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளதை வைத்து மீம்ஸ்கள் உலா வருகின்றன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: குளிர்பான நிறுவனங்களாக பெப்சி, கோக் நிறுவனங்கள் தாமிரபரணியாற்றில் இருந்து தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீக்கியுள்ளதை வைத்து மீம்ஸ்கள் போட்டு வருகின்றனர் சமூகவலைதளவாசிகள்.

தாமிரபரணியை தாரை வார்த்து விட்டு இப்போது குடிநீருக்கு கூட கையேந்தும் நிலைக்கு கொண்டு வைத்து விடுவார்கள். என்றும் இதை எதிர்த்து கேள்வி கேட்டால் தேசதுரோகி முத்திரை குத்தி விடுவார்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

குளிர்பான நிறுவனங்களின் வண்ணங்களை வைத்து கழிவறை கழுவ வரும் விளம்பரத்தையும் கலந்து கட்டி மீம்ஸ் போட்டு கலக்கி வருகின்றனர்.

போராட்டம்

அனைத்து ராசிக்காரர்களுக்கும் இனி போராட்டம்தான் என்றும், தாமிரபரணியை காக்கவும், நெடுவாசலை காக்கவும், விவசாயிகளைக் காக்கவும் போராட வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.

டாய்லெட் கிளீனர்

நீலம் டாய்லெட் கழுவ, சிவப்பு பாத்ரூம் கழுவ என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். இதை விட யாராலும் கலாய்க்க முடியாது. இனி மனுசன் குடிப்பானா இவைகளை?

கேள்வி கேட்டா நக்சலைட்டா?

பெப்சி, கோக் குடிக்க மாட்டோம் என்று தமிழக இளைஞர்கள் அறிவித்துள்ளனர். விற்க மாட்டோம் என்று வணிகர்கள் கூறியுள்ளனர். இந்திராநூயி சில தினங்களுக்கு முன்பு அருண் ஜெட்லியை சந்தித்து பேசியுள்ளார். இப்போது தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடையில்லை என்று உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு சொல்கிறது. இதை எதிர்த்து கேள்வி கேட்டால் தேசதுரோகி பட்டம்தான் கிடைக்கும் என்பது வலைஞர்களின் ஆதங்கம்.

தமிழர்களை அடிப்பதா?

தமிழர்களை ஏன் இப்படி நசுக்குகிறீர்கள் என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர். காவிரி பிரச்சினை தொடங்கி இப்போது ஹைட்ரோகார்பன் திட்டம் வரை தமிழர்களை மட்டுமே குறிவைப்பது ஏன் கேட்கிறார் இந்த வலைஞர்.

அனுமதி கொடுத்தது ஏன்?

நாங்கள் குடிக்க மாட்டோம், விற்கமாட்டோம் என்று கூறியும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது ஏன் என்று கேட்கிறார் ஒருவலைஞர். பெப்சி, கோகோ கோலாவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. நாம் கொடுத்தது சாம்பிள்தான்.

English summary
Memes creators and people are overworking on the Madurai HC bench order on the permission to take Tamirabarani water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X