For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெப்சி, கோக்கு பதில் தாமிரபரணி தண்ணீரில் சர்க்கரை கலந்து குடிக்கலாம்!

தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு மீம்ஸ் வாயிலாக நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

Google Oneindia Tamil News

சென்னை: பெப்சி, கோக் நிறுவனங்கள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடைவிதிக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று தள்ளுபடி செய்தது. இதன்மூலம் பெப்சி கோக் நிறுவனங்கள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்களும் தங்களின பங்குக்கு சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வாயிலாக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர் அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

தண்ணி கொடுக்க சொல்ல துப்பில்லை

மக்களுக்கு அரசாங்கம் ஒழுங்கா தண்ணி கொடுக்க சொல்ல துப்பில்லை இந்த கோர்ட்டுக்கு #பெப்சி #கோக்குக்கு தண்ணியாம்......!

சர்க்கரை கலந்து குடிக்கலாம்!

#பெப்சி, #கோக் குடிக்கலாமா?
அதுக்கு நீ #தாமிரபரணி தண்ணீரில் சர்க்கரை கலந்து குடிக்கலாம்!

நீதியை விட நிதியே அதிகம் ஜெயிக்கிறது

நீதி சில முறை தோற்றாலும்,
நிதி எல்லாமுறையும் ஜெயித்தே விடுகிறது.
#தாமிரபரணி #பெப்சி

தமிழகத்துக்கு மட்டும் நீதி கிடைப்பதில்லை

தமிழகத்துக்கு மட்டும் இந்தியாவில் நீதி கிடைப்பதில்லை...

இதுக்கு போராடலாமே சார்

கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்காது!- பொன்.ராதாகிருஷ்ணன்!
#பெப்சி கோக் கம்பேனியால் தாமிரபரணி நீர் வீணாபோகுதே போராடலாமே ராதாசார்...

2வது முறையாக தாமிரபரணி தற்கொலை

இரண்டாவது முறையாக தற்கொலை செய்துகொள்கிறது #தாமிரபரணி #பெப்சி #தாமிரபரணி_கலவரம்

இதுதான் சந்துல சிந்து பாடுறதா?

#பெப்சி , #கோகோ கோலா , #சசிகலா இவற்றை அறவே ஒழித்து ..#இளநீர் , #பன்னீர் போன்றவற்றை ஆதரிப்போம்...

English summary
High court bench of madurai gave permission for pepsi and coke to take water in thamirabharani river. To oppose this netisons creats memes on internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X