For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனவளர்ச்சி குன்றிய சிறுவனின் சப்-இன்ஸ்பெக்டர் கனவு! நிறைவேற்றிய கமிஷனர்

மனவளர்ச்சி குன்றிய சென்னை சிறுவனின் சப்-இன்ஸ்பெக்டர் கனவை, மாநகர கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் நிறைவேற்றி பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: மனவளர்ச்சி குன்றிய நிலையில் வாழ்ந்துவரும் சிறுவனின் சப்-இன்ஸ்பெக்டர் கனவை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நிறைவேற்றினார்.

சென்னை ஜாபர்கான்பேட்டை, ராமச்சந்திர தெருவை சேர்ந்தவர் ராஜூவ் தாமஸ். இவர் மகன் ஸ்டீவின் மேத்யூ. மனவளர்ச்சி குன்றியவர். இவர்கல் கத்தார் நாட்டில் குடியிருந்தனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு கத்தார் சென்றிருந்தபோது, அங்கு இந்திய தூதரகம் நடத்திய மனவளர்ச்சி குன்றிய மாணவர்களின் கலைநிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டு பாராட்டினார். அதில் ஸ்டீவின் மேத்யூவும் கலந்துகொண்டு நடனமாடினார் என்பது நினைவுகூரத்தக்க ஒன்று.

பின்னர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களை சந்தித்து அவர்களுடைய லட்சியம், விருப்பம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அப்போது ஸ்டீவின் மேத்யூ, பிரதமர் மோடியிடம், 'நான் ஒரு நாள் போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டும்' என்று தனது ஆழ்மனது ஆசையை தெரிவித்தார்.

 சென்னைக்கு வந்தனர்

சென்னைக்கு வந்தனர்

கத்தார் நாட்டில் இருந்து அண்மையில் ஸ்டீவின் மேத்யூவும், அவருடைய குடும்பத்தினரும் சென்னைக்கு வந்தனர். உடனே, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து ஸ்டீவின் மேத்யூவின் போலீஸ் 'காவல் துறை' ஆசையை அவருடைய பெற்றோர் எடுத்துக்கூறினர்.

 ஆசையை நிறைவேற்றிய கமிஷனர்

ஆசையை நிறைவேற்றிய கமிஷனர்

இதனைத்தொடர்ந்து அவரது ஆசையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் இறங்கினார். அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு மணி நேரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் அமர்வதற்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அனுமதி கொடுத்தார்.

 2 ஸ்டார் யூனிபார்ம்

2 ஸ்டார் யூனிபார்ம்

அதன்பேரில் ஸ்டீவின் மேத்யூவுக்கு போலீசார் சார்பில் 2 நட்சத்திரங்களுடன் சப்-இன்ஸ்பெக்டருக்கான சீருடை வழங்கப்பட்டது. அந்த உடையை அணிந்து மாலை 5.45 மணியளவில் அசோக் நகர் போலீஸ் நிலையத்துக்கு ஸ்டீவின் மேத்யூ வந்தார்.

 பூங்கொத்து மரியாதை

பூங்கொத்து மரியாதை

அவரை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பதிலுக்கு அவருக்கு ஸ்டீவின் மேத்யூ சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.

 போலீஸ் செயல்பாடுகள் விளக்கம்

போலீஸ் செயல்பாடுகள் விளக்கம்

பின்னர் போலீஸ் நிலையத்துக்குள் சென்ற ஸ்டீவின் மேத்யூவிடம் போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்தார். ஸ்டீவின் மேத்யூ சப்-இன்ஸ்பெக்டர் இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்தார்.

 மகிழ்ச்சியோடு ரோந்து பணி

மகிழ்ச்சியோடு ரோந்து பணி

பின்னர் போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டார். அதன்பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டார். அவருக்கு நினைவு பரிசு வழங்கி, குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டு போலீசார் வழியனுப்பினர்.

English summary
Chennai Police helped Mentally challenged youth from Qutar, to achive his Sub- Inspector dream comes true.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X