For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இத்தனை காலமாக சொல்லாமல் இப்போது புகார் கூறுவது ஏன்.. சின்மயி தரும் விளக்கம் இதுதான்!

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது வைத்து இருக்கும் ''மீடூ #MeToo'' குற்றச்சாட்டுகள் பெரிய விவாதத்தை உருவாக்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இத்தனை காலமாக சொல்லாமல் இப்போது புகார் கூறுவது ஏன்.. சின்மயி விளக்கம்- வீடியோ

    சென்னை: பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது வைத்து இருக்கும் ''மீடூ #MeToo'' குற்றச்சாட்டுகள் பெரிய விவாதத்தை உருவாக்கி உள்ளது.

    ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் பெரிய புயலை கிளப்பி உள்ளது. முக்கியமாக தமிழக திரையுலகில் சூறாவளியை உருவாக்கி உள்ளது.

    இந்த ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இதில் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். சில பிரபலங்கள் குறித்து வரும் பாலியல் புகார்களை பதிவிட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்து குறித்தும் பாலியல் குற்றச்சாட்டை வைத்தார்.

    குற்றச்சாட்டு வைத்தார்

    2005 அல்லது 2006ல் சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்கள் பற்றிய நிகழ்வு ஒன்றுக்காக சின்மயி பாட செல்லும் போது, இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறியுள்ளார். அப்போது கவிஞர் வைரமுத்து சின்மயியை, அவருடைய அறைக்கு அழைத்ததாக கூறியுள்ளார். இதனால் அன்று இரவே சுவிட்சர்லாந்தில் இருந்து கிளம்பி வந்துவிட்டதாக தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார். இதுதான் சின்மயி வைத்த முதல் குற்றச்சாட்டு ஆகும்.

    வைரமுத்து அளித்த பதில்

    இதற்கு வைரமுத்து நேற்று விளக்கம் அளித்தார், அதில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும், என்றுள்ளார்.

    பதிலுக்கு பதில்

    இந்த நிலையில், இந்த டிவிட்டை ஷேர் செய்த சின்மயி, பொய்யர் என்று வைரமுத்துவை குறிப்பிட்டுள்ளார்.

    வாழ்த்து

    வாழ்த்து

    2005லோ இல்லை 2006லோ இந்த சம்பவம் நடந்ததாக சின்மயி கூறியுள்ளார். ஆனால் அதன்பின் எப்போதும் போல டிவிட்டரில் வைரமுத்துவுடன் சின்மயி பேசி வந்துள்ளார். 2014ல் வைரமுத்து பத்ம பூஷன் விருது வாங்கியதற்கு கூட வாவ் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் ஸ்கிரீன்ஷாட் வெளியாகி உள்ளது.

    என்ன விளக்கம்

    இதற்கு தற்போது சின்மயி விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆமாம் நான் எப்போதும் புதிய படம் வெளியானால் நான் யாருடன் பாடினேனோ அதை குறிப்பிடுவேன். அதனால் குறிப்பிட்டேன். ஆம் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்தேன். மக்கள் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள் அதனால் தெரிவித்தேன் என்றுள்ளார்.

    திருமணத்திற்கு அழைத்தார்

    இந்த நிலையில் சின்மயி 2014ல் தனது திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்துள்ளார். இதில் வைரமுத்துவின் காலில் விழுந்து முகத்தை வைத்து சின்மயி மரியாதை செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

    என்ன விளக்கினார்

    இதற்கு சின்மயி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி நான் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை. வைரமுத்தை கல்யாணத்திற்கு அழைக்கவில்லை என்றால் பிரச்சனையாகும். கேள்வி கேட்பார்கள். அதனால் அப்போது அவரை திருமணத்திற்கு அழைத்தேன் என்றுள்ளார்.

    இதற்கு என்ன விளக்கம்

    மேலும் காலில் விழுந்தது குறித்து, நான் அங்கு எல்லோருடைய காலிலும் விழுந்தேன். எனக்கு அங்கு வேறு வழி தெரியவில்லை. வைரமுத்து காலில் மட்டும் விழவில்லை என்றால் பிரச்சனை ஆகி இருக்கும். அதனால் அப்படி செய்தேன் என்றுள்ளார்.

    ஆண்டாள் விவகாரம்

    இந்த நிலையில் வலதுசாரி அமைப்புகள் வைரமுத்துக்கு எதிராக உள்ளது இன்னொரு கேள்வியை எழுப்பி உள்ளது. ஆண்டாள் விவகாரம் காரணமாக இப்படி வைரமுத்துவை வலதுசாரி கொள்கை கொண்டவர்கள் திட்டுகிறார்கள். இது பொய்யான புகார் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆண்டாள் பிரச்சனை மீண்டும் விவாதம் ஆகியுள்ளது.

    ஏன் இவ்வளவு நாள் சொல்லவில்லை

    ஏன் இவ்வளவு நாள் சொல்லவில்லை

    இந்த நிலையில் இவ்வளவு நாள் ஏன் சின்மயி இதை சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. 13 வருடமாக இந்த விஷயத்தை சின்மயி வெளியே சொல்லவில்லை. இப்போது ஏன் புகார் அளிக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அதற்கு விளக்கம்

    அதற்கு விளக்கம்

    இதற்கு ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் அவர் விளக்கம் அளித்துளளார். அதில், ஆம் இவ்வளவு நாளாக எனக்கு இதை சொல்ல தைரியம் இல்லை. அதற்கான சூழ்நிலை இல்லை. இப்போதுதான் வீட்டில் கணவரிடம் சொன்னேன். அதன்பின்பே தைரியம் வந்தது. எல்லோரிடமும் சொல்கிறேன் என்றுள்ளார்.

    அவர் மீது மட்டுமா?

    வைரமுத்து மீது மட்டுமில்லாமல் சில கர்நாடக சங்கீத வித்வான்கள் மீதும் இவர் குற்றச்சாட்டு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Metoo allegations: Vairamuthu Chinmayi controversy - Full details.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X