For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரு மடங்காக உயர்ந்தது மேட்டூர் அணை நீர் மட்டம்... டெல்டா பாசனத்துக்கு இன்று மாலை நீர் திறப்பு

அதிக நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் டெல்டா பகுதிகளுக்கு இன்று நீர் திறந்துவிடப்படும் என்ற அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    Discharge of water from mettur dam reduced - Oneindia Tamil

    சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் தமிழகம் எங்கும் மழை கொட்டி வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகள் அதிகரித்துள்ளன.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது.இத்தனை நாள்கள் 10,535 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 21,947 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் 3.06 அடி

    ஒரே நாளில் 3.06 அடி

    அதேபோல் அணையின் இருப்பு 17.046 டிஎம்சியாக உயர்ந்துள்ள நிலையில் வினாடிக்கு 700 கன நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 3.06 அடி உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 48.17 அடியாக உள்ளது.

    13 ஆண்டுகளுக்கு பிறகு

    13 ஆண்டுகளுக்கு பிறகு

    கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் இன்னும் 40 நாள்களில் அணை முழுகொள்ளளவை எட்டிவிடும்.

    இன்று மாலை நீர் திறப்பு

    இன்று மாலை நீர் திறப்பு

    நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன பகுதிகளுக்கு இன்று மாலை நீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு அறிவித்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை

    ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை

    வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-ஆவது நாளாக நீடிக்கிறது.

    இன்று மாலை நீர் திறப்பு

    இன்று மாலை நீர் திறப்பு

    நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன பகுதிகளுக்கு இன்று மாலை நீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு அறிவித்தார். இன்று முதல் 12 நாள்களுக்கு மேற்கு கால்வாய் மூலம் வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    Heavy rain in Cauvery water capture areas increases the Mettur Dam's water level . Farmers are very happy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X