For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்ஜிஆர் படப்பிடிப்பு தள திறப்பு: அரசு திரைப்பட விருதுகள் விரைவில் வழங்கப்படும்.. முதல்வர் உறுதி

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தள திறப்பு விழாவில் பேசியுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தள திறப்பு விழாவில் பேசியுள்ளார்.

சென்னைக்கு அருகே இருக்கும் மாமல்லபுரம் பையனூரில் தமிழக அரசு சார்பில் படப்பிடிப்புத் தளம் கட்டப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

MGR cinema studio ceremony: Will give TN govt soon for cinema says TN CM

65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு மிகவும் பெரிய அளவும் 15 ஏக்கரில் இந்த படப்பிடிப்புத் தளம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு 5 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 56 அடி உயரம் உள்ள இதுதான் இந்தியாவிலேயே மிக உயரமானது ஆகும் .

இதை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதில் பல திரை நட்சத்திரங்கள், நடிகர்கள் கலந்து கொண்டனர். சில முதல்வர் பழனிச்சாமி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், திரைத்துறையில் எம்ஜிஆர் புகழ் பெற அவர் புரட்சி நடிகராக இருந்ததே காரணம். சமூக கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றதில் திரைப்படங்களுக்கு பங்குண்டு நாகரீக உலகில் மனிதன் உருவாக்கிய மிகச்சிறந்த படைப்பு சினிமா.

கடன் பெறாமல் படப்பிடிப்பு தளத்தை ஃபெப்சி உருவாக்கியதற்கு பாராட்டு. கலைநிகழ்ச்சி மூலம் நிதி திரட்டி ஃபெப்சி படப்பிடிப்பு தளத்தை உருவாக்கியுள்ளது. மேலும் பல படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட்டால் தயாரிப்புச் செலவு குறையும்.

திரைப்படத் துறையினருக்கும் வீடுகள் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விரைவில் வழங்கப்படும். ஜெயலலிதா பெயரில் அமைக்கப்படும் படப்பிடிப்பு தளத்திற்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றுள்ளார்.

English summary
MGR cinema studio ceremony: Will give TN govt soon for cinema says TN CM Edappadi Palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X