For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்காள் கணவர் கொலை வழக்கில் எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் பானு ஆயுள் தண்டனை கைதியான கதை இது....

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள்களில் ஒருவரான சுதாவின் கணவர் எம்.ஜி.ஆர். விஜயன் கொலை வழக்கில் மற்றொரு வளர்ப்பு மகள் பானு கொலையாளி என குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

வாரிக் கொடுத்த வள்ளல் எம்.ஜி.ஆர். குடும்பத்தில் இப்படி ஒரு இருள் படர்ந்தது இப்படித்தான்.....

  • எம்.ஜி.ஆருக்கு வாரிசு இல்லாததால் அவரது மனைவி ஜானகியின் தம்பி நாராயணனின் மகள்கள் லதா, கீதா, ஜானகி, சுதா, பானு, மனோ ஆகியோரை வளர்ப்பு மகள்களாக அவர் ஏற்றார்.
  • தம் மறைவுக்குப் பிறகு ராமாவரம் தோட்டம் வளர்ப்பு மகள்களுக்கே சொந்தமாகும் எனவும் உயில் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.
MGR's foster daughter gets life for murder
  • எம்.ஜி.ஆர். உயிலை நிர்வகிக்கும் பொறுப்பு தொடக்கத்தில் அவரது வழக்கறிஞர் ராகவாச்சாரியிடமும் பின்னர் வளர்ப்பு மகள்களில் ஒருவரான லதாவிடமும் வந்தது.
  • எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள்களான லதா, அவரது கணவர் ராஜேந்திரன்; சுதா அவரது கணவர் (எம்.ஜி.ஆர்) விஜயன் ஆகியோருக்கு இடையே சொத்து விவகாரங்களில் தொடர்ந்து மோதல் இருந்து.
  • எம்.ஜி.ஆரின் பிரசார வேனை லதா தரப்பு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொடுத்த விவகாரத்திலும் விஜயன் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
  • இந்த நிலையில் 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி விஜயன் மர்ம நபர்களால் சென்னை கோட்டூர்புரம் அருகே படுகொலை செய்யப்படுகிறார்.
  • விஜயன் கொலை வழக்கில் போலீசார் துப்பு கிடைக்காமல் தவித்து வந்ததால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
  • இவ்வழக்கில் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் லதா, அவரது கணவர் ராஜேந்திரன் மீதுதான் உடனடியாக சந்தேகப்பார்வை பட்டது.
  • அதேநேரத்தில் எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகள்களில் ஒருவரும் சுதாவின் சகோதரியான பானுவிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது விஐபிக்கள் பலரது பெயரையும் சொல்லி எஸ்கேப்பாக பார்த்திருக்கிறார் பானு.
  • பானுவின் ஒவ்வொரு வாக்குமூலமும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் அவர் மீதான சந்தேகம் இறுகியது.
  • பானுவின் செல்போன்களை ஆராய்ந்ததில் நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் கருணா என்பவரிடம் அவர் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது.
  • கருணாவை கஸ்டடிக்கு எடுத்து விசாரித்தபோதுதான் பானுவுக்காக கூலிப்படையை ஏவி விஜயனை கொலை செய்தது அம்பலமானது.
  • லதா- ராஜேந்திரன் தரப்பும் சுதா- விஜயன் தரப்பும் மோதிக் கொண்டிருந்த நிலையில் பானு தரப்புடனும் மறைமுகமாக மல்லுகட்டினாராம் விஜயன். அதான் விஜயன் கொலைக்கான காரணம்.
  • அதாவது சத்தியா எஜுகேஷனல் மற்றும் சாரிட்டபிள் சொசைட்டியில் 6 உயர்நிலை, ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இதில் வடபழனி பள்ளியின் முதல்வராக இருப்பவர் பானு. அங்கு நிர்வாக பொறுப்பில் இருப்பவர் பானுவின் கூடப் பிறந்த சகோதர் திலீபன்.
  • வடபழனி பள்ளி நிர்வாகப் பொறுப்பையும் தம்மிடமே ஒப்படைக்குமாறு திலீபனிடம் பானு போராடிக் கொண்டிருந்தார். இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
  • திலீபன் தரப்புக்கு சட்ட ஆலோசனைகளை விஜயன்தான் கொடுத்து வந்திருக்கிறார். இதனால் விஜயனை ஒழித்துக்கட்டிவிட்டால் பள்ளியைக் கைப்பற்றலாம் என பானு கணக்குப் போட்டார்.
  • பானு தம்முடைய தோழி புவனாவிடம் விஜயன் விவகாரத்தைப் பற்றி புலம்பியிருக்கிறார். அந்த புவனா, அவருடைய நண்பரான போலீஸ்காரர் கருணாவிடம் இதைபற்றி சொல்லியிருக்கிறார்.
  • இந்த அடிப்படையில் பானுவுக்காக ஒரு கூலிப்படையை ஏவி விஜயனை போட்டுத் தள்ள ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்கிறார் போலீஸ்காரர் கருணா. இந்த கொலைக்கு கொடுக்கப்பட்ட சன்மானம் ரூ4 லட்சம்.
  • போலீஸ் நடத்திய விசாரணைகளில் இத்தனை உண்மைகளும் வெளிவர நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட தற்போது எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்களில் ஒருவரான பானு இப்போது கொலையாளியாக அதுவும் அக்கா வீட்டுக்காரரையே கூலிப்படை ஏவி கொலை செய்த கொலையாளியாக ஆயுள்தண்டனை அனுபவித்து வருகிறார்.

எல்லாம் பேராசை!

English summary
Former Tamil Nadu Chief Minister MGR’s foster daughter N Banu was convicted and sentenced to life in Vijayan, the foster son-in-law of MGR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X