For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்.ஜி.ஆர். வளர்ப்பு மருமகன் விஜயனை 'முடிக்க' போலீஸ் கருணா போட்டுத் தந்த 'ஸ்கெட்ச்' இதுதான்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: எம்.ஜி.ஆர். குடும்பத்தைச் சேர்ந்த வளர்ப்பு மருமகன் விஜயனை கொலை செய்த வழக்கில் வளர்ப்பு மகள் பானுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பானுவுக்காக விஜயனை கூலிப்படையை ஏவி ஸ்கெட்சு போட்டு படுகொலை செய்ய வைத்தது போலீஸ்காரர் கருணா.

எம்.ஜி.ஆர். விஜயன் கொலையை எப்படி நடத்த வேண்டும் என "போலீஸ்" கருணா போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் இது...இப்படித்தான் விஜயன் கொலை செய்யப்பட்டார்...

  • 2008-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி அபிராமபுரத்தில் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார் விஜயன்.... அப்போது விஜயனுடன் செந்தில் என்ற பொறியாளர் காரில் இருக்கிறார்...
MGR’s foster son-in-law Vijayan Murder and Police Karuna
  • விஜயன் கிளம்பும் போது கூலிப்படையை சேர்ந்த தீனா கார்த்தி அவரது காரை பைக்கில் பின் தொடர்ந்தார்.
  • அதே நேரத்தில் கோட்டூர்புரத்தில் மற்றொரு காரில் கூலிப்படையைச் சுரேஷ், டிரைவர் சீட்டில் உட்கார்ந்தபடி வெயிட்டிங்...
  • கோட்டூர்புரம் வளைவில் விஜயன் கார் வர... சுரேஷுக்கு தீனா கார்த்தியிடம் இருந்து சிக்னல் வருகிறது...
  • விஜயன் கார் நெருங்கி வர கூலிப்படை சுரேஷ் வேண்டுமென்றே அந்த காரின் மீது வேகமாக ஓட்டி சென்று 2 முறை மோதுகிறார்....
  • கார் இடிக்கப்பட்ட கோபத்தில் சட்டென விஜயன் காரை நிறுத்திவிட்டு கோபத்துடன் கீழே இறங்குகிறார்... அவருடன் காரில் வந்த செந்திலும் இறங்குகிறார்..
  • காரை வேண்டுமென்றே இடித்த சுரேஷ், விஜயனுடன் தகராறு செய்வது போல நடித்துக் கொண்டிருக்கிறார்..
  • விஜயன் காரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த தினேஷ் கார்த்தி சரியாக சம்பவ இடத்துக்கு வந்து சேருகிறார்...
  • வந்த வேகத்தில் விஜயன் தலையில் இரும்புத்தடியால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தி கிரேட் எஸ்கேப்.. .சம்பவ இடத்திலேயே சுருண்டு உயிரிழக்கிறார் விஜயன்.
  • இத்தனை சம்பவத்தையும் சற்று தொலைவில் இருந்தபடி முழுவதுமாக கண்காணித்த போலீஸ் கருணாவுடன்தான் சுரேஷூம் தினேஷ் கார்த்திக்கும் தப்பினர்.
  • செந்திலும் அப்பகுதி வழியாக சென்ற சிலரும் நடந்த சம்பவத்தை முழுமையாக நேரில் பார்த்த சாட்சிகள்.

இப்படித்தான் போலீஸ் கருணா போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் அரங்கேறியது...எம்.ஜி.ஆர். விஜயன் படுகொலையானார்...

விளைவு... எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் கொலையாளியாகி ஆயுள் தண்டனைக் கைதியானார்.

English summary
Here the details of How the MGR's foster son-in-law Vijayan murder in 2008.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X