For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆயிரக்கணக்கான பணியாளர்களை வெளியேற்றுகிறது மைக்ரோசாப்ட்.. காரணம் என்ன?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நாடுகளில் வேலை பார்ப்போருக்கு குறி வைத்துள்ளது மைக்ரோசாப்ட்.

பல நாட்களாகவே இந்த வதந்தி இருந்து வந்த நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், தற்போது இத்தகவலை உறுதி செய்துள்ளது. சுமார்ர 3000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சிஎன்பிசி செய்தி சேனலுக்கு மைக்ரோசாப்ட் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் அளித்த பேட்டியில், சில பணியாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். பிற நிறுவனங்களில் நடப்பதை போலத்தான் மைக்ரோசாப்ட்டிலும் மாற்றங்கள் நடைபெறுகிறது.

பிற நாடுகள்

பிற நாடுகள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்காக அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளில் 121,000 பேர் பணியாற்றுகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 71000 பேர் வேலை பார்க்கிறார்கள் இதில் அமெரிக்காவுக்கு வெளியே உள்ள ஊழியர்களைத்தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் குறி வைக்கிறது.

விசா

விசா

அமெரிக்காவில், ஹெச்-1 பி விசா விண்ணப்பங்களுக்காக விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அடிப்படையில் மைக்ரோசாப்ட் 9வது இடத்தில் உள்ளதாக கடந்த ஆண்டு வெளியான புள்ளி விவரம் கூறியது. நடப்பாண்டில் இது 5000த்தை தாண்டியுள்ளது.

 இது வேறு

இது வேறு

ஆண்டுதோறும் ஹெச்-1பி விசா மூல், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு 100,000 பேர் பணியாற்றி வருகிறார்கள். பல்கலைக்கழகங்கள், லாபநோக்கமற்ற நிறுவனங்களுக்காக அமெரிக்கா வருவோர் எண்ணிக்கை இதில் சேராது.

முன்னணி

முன்னணி

ஹெச்-1பி விசா மூலம் அதிக பணியாளர்களை அமெரிக்கா வரவழைக்கும் நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் இவ்வாண்டு டாப்பில் உள்ளது. எனவே, வெளிநாட்டு பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்க அது திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
The Microsoft Corporation is expected to lay-off up to 3,000 employees as the tech conglomerate continues to request and hire more foreign help.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X