For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வழக்கம் போல் நாளை பால் விநியோகம் செய்யப்படும்.. வதந்திகளை நம்ப வேண்டாம்!

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வழக்கம் போல் நாளை பால் விநியோகம் செய்யப்படும் எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை காரணமாக கொண்டு நாளை பால் கிடைக்காது என தவறான தகவல்களை ஒரு சில விஷமிகள் பரப்பி வருகின்றனர்.

Milk distribution will not affected tomorrow

கடும் மழை வெள்ளத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போதும், சுனாமி தாக்கிய போதும், கடுமையான மழை, வெள்ளம், பனி என எந்த ஒரு இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள் ஏற்பட்டாலும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அத்தியாவசியப் பொருளாக விளங்கும் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கொண்டு போய் சேர்க்கும் பணியினை பால் முகவர்கள் சிறப்பான முறையில் செய்து வந்திருக்கிறோம். தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கிறோம்.

தமிழக முதல்வர் அவர்கள் பரிபூரணமாக குணமடைய வேண்டும் என நினைக்கும் கோடிக்கணக்கான இதயங்களில் ஒருவர்களாக இருக்கும் பால் முகவர்கள் இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்களுக்கு தங்குதடையற்ற சேவையை வழங்கிட தயாராக இருக்கிறார்கள். அது போலவே ஆவின் மற்றும் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் மக்கள் நலப்பணியாற்றிட தயாராக இருக்கிறார்கள்.

பொதுமக்கள் எவரும் தேவையற்ற பதற்றத்தை உருவாக்காமல் வழக்கம் போல் இருக்குமாறும், பால் முகவர்களின் கடைகளுக்கும், விநியோகம் செய்யும் வாகனங்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டு கொள்கிறோம்.

மேலும் பால் கிடைக்காது என தவறான தகவல்களை பரப்புவதால் ஒரு சில விஷமிகள், சுயநலம் கொண்ட சில்லறை வணிகர்கள் பாலினை இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அவ்வாறு பாலினை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கும், எங்களது சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பாலினை அதிக அளவில் இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்க மாட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே நாளை பால் கிடைக்காது எனும் தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் எவரும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Milk distribution will not affected tomorrow, said Tamilnadu milk agents welfare society.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X