For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிரைவர் கொல்லப்பட்டதாக கூறுவது தவறான செய்தி.. ஓ.எஸ். மணியன் விளக்கம்

டிரைவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுதான் மரணமடைந்தார். அடித்து கொன்று விட்டதாக தவறான தகவல் வெளியாகியுள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சரின் ஓட்டுநர் நெஞ்சுவலியால் டூவீலரில் இருந்து விழுந்து மரணம்-

    சென்னை: டிரைவரின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியுள்ளார். இரண்டு நாட்கள் விடுப்பில் இருந்து விட்டு இன்று பணிக்கு வந்த சவுந்தரராஜன், உடல்நலக்குறைவினாலேயே மரணமடைந்து விட்டதாகவும் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசின் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கார் டிரைவராக பணியாற்றியவர் சவுந்திரராஜன். சென்னை சூளைமேட்டில் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த சவுந்தரராஜன்,இன்று காலையில் பணிக்கு சென்றார். அப்போது நெஞ்சுவலி ஏற்படவே, அவர் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது கீழே விழுந்து உடலில் காயம் ஏற்பட்டுள்ளது.

    Minister clarifies the death of his driver

    இதனையடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சவுந்தரராஜன் மரணமடைந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து உடலில் காயங்களுடன் அவரது உடல் உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் ஒ.எஸ்.மணியன் அவரது வீட்டிற்கு நேரில் ஆறுதல் கூற சென்ற போது அவரை பார்க்க விடவில்லை.
    அமைச்சரை முற்றுகையிட்டு அவரது உடலில் காயம் இருப்பதால் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

    இதனையடுத்து டிரைவர் சவுந்தரராஜனின் உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக சூளைமேடு காவல்துறை விசாரனை நடத்தி வருகின்றனர்.
    அமைச்சர் அடித்து கொன்று விட்டதாக டிரைவரின் மனைவி குற்றம் சாட்டினார்.

    இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த ஓ எஸ் மணியன், கடந்த 2 நாட்களாக விடுப்பில் இருந்த டிரைவர் சவுந்தரராஜன், இன்று காலை 4 மணிக்கு ரயில் நிலையத்திற்கு வந்து என்னை அழைத்து வந்தார். காலையில் வீட்டில் இருந்த போதுதான் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நடந்து சென்றுதான் மருத்துவமனைக்கு செல்வதாக கூறினார்.

    நான் எனது பாக்கெட்டில் இருந்த பணத்தை கொடுத்து அனுப்பினேன். இரு சக்கர வாகனத்தில் சென்ற அவர், ராணி மேரி கல்லூரி அருகே சென்ற போது விழுந்து விட்டார். அவரை பார்த்த போது எதுவுமே இல்லை. டாக்டர்கள் பரிசோதனை செய்து மரணமடைந்து விட்டதாக கூறினார். நான் அஞ்சலி செலுத்த சென்ற போது உறவினர்கள் விடவில்லை என்றார்.

    சவுந்தரராஜன் மரணமடைந்தது பற்றி விளக்கம் தரவே இந்த பேட்டி, முதலில் போலீசார் அடித்து கொன்று விட்டதாக கூறினர், இப்போது அமைச்சரே அடித்து கொன்று விட்டார் என்று செய்தி ஒளிபரப்பாகிறது.
    என்றார்.

    இப்படி எல்லாம் நெருப்பை கொளுத்தி போடக்கூடாது என்று கூறிய அமைச்சர், தீவிரவாதத்தை பரப்பாதீர்கள் என்றும் காட்டமாக கூறினார் அமைச்சர் ஓ.எஸ் மணியன். அமைச்சரிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல மறுத்தார் அமைச்சர் ஓ.எஸ் மணியன். எந்த பிரச்சினையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றும் அமைச்சர் ஓ எஸ் மணியன் கூறியுள்ளார்.

    English summary
    Minister O S Manian has clarified the death of his personal driver on duty this morning.Sources close to the minister however dismissed any foulplay and said Soundararajan was rushed to hospital immediately after he complained of chest pain. They also said they are ready to face investigation and cooperate with it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X