For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக் ஆயுக்தாவைக் குறை கூறுவதா... ஜெயக்குமாரிடம் "பல்பு" வாங்கிய திமுக!

லோக் ஆயுக்தாவை ஸ்டாலின் கடைசி நேரத்தில் எதிர்த்தது ஏன் என்று தெரியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டசபையில் லோக் ஆயுக்தா தாக்கல்..அனைத்து கட்சிகளும் ஆதரவு!- வீடியோ

    சென்னை: லோக் ஆயுக்தாவை ஸ்டாலின் கடைசியில் எதிர்த்தது ஏன் என்று தெரியவில்லை. பெரிய மாளிகையில் சிறிய பல்பு இல்லை என்பது போல் திமுக குறை கூறுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வழி வகை செய்யும் லோக் ஆயுக்தா இன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

    ஆனால் லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் இன்றுடன் சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்ததால் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்தினர்.

    வெளிநடப்பு

    வெளிநடப்பு

    அப்போது அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் லோக் ஆயுக்தவை கொண்டு வர சொன்னதே திமுகதான். ஆனால் இன்று அதை எதிர்த்து விட்டு வெளிநடப்பு செய்கிறார்கள்.

    பெரிய மாளிகை

    பெரிய மாளிகை

    வரலாற்றுச் சிறப்பு மிக்க லோக் ஆயுக்தா சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பெரிய மாளிகையில் சிறிய பல்பு இல்லை என்பது போல் திமுக குறை கூறுகின்றனர்.

    தன்னாட்சி அதிகாரம்

    தன்னாட்சி அதிகாரம்

    ஊழலை ஒழிப்பதற்கான எண்ணம் திமுகவுக்கு துளியும் இல்லை. எல்லாவற்றிலும் ஊழல் செய்த கட்சி திமுக. அக்கட்சிக்கு லோக் ஆயுக்தாவால் பயம், அதனால்தான் தேர்வுக் குழுவுக்கு அனுப்புமாறு கூறுகின்றனர். தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு லோக் ஆயுக்தா.

    விசாரிக்கலாம்

    விசாரிக்கலாம்

    ஊழல் எதிர்ப்பு என்ற நிலை திமுகவிடம் இல்லை. முதல்வர் உள்ளிட்ட அனைவரையும் இந்த அமைப்பால் விசாரிக்க முடியும் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

    English summary
    Minister Jayakumar condemns DMK for opposing Lok Ayuktha in the last minute.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X