For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர்களின் 'ஆப்' அரசியல் அவர்களுக்கே ஆப்பாகிவிடும்... அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்!

நடிகர்களின் ஆப் அரசியல் அவர்களுக்கே ஆப்பாகி விடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    டிடிவி கண்டிப்பாக ஜெயிலுக்கு போவார்-ஜெயக்குமார்- வீடியோ

    சென்னை : நடிகர்கள் செயலியில் தொடங்கும் அரசியல் அவர்களுக்கே ஆபத்தானதாகப் போய் முடிந்துவிடும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேலி செய்துள்ளார்.

    சென்னை மாநகரை மேம்படுத்தும் வகையில் சீர்மிகு சென்னை என்ற புதிய இணையதளம் மற்றும் நம்ம சென்னை என்ற செயலியையும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணிணியுமம் வழங்கப்பட்டன.

    மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிகழ்ச்சியில் பேசிய போது, டிஜிட்டல் உலகில் தமிழகம் முன்னோடியாக இருப்பதாக தெரிவித்தார். அரசு தொடங்கும் ஆப்கள்(செயலிகளால்) தமிழகத்திற்கு வளர்ச்சி தோன்றும் என்றார்.

    நடிகர்களின் ஆப் ஆபத்தானது

    நடிகர்களின் ஆப் ஆபத்தானது

    அரசு அறிமுகம் செய்யும் ஆப்கள் எல்லாமே வளர்ச்சிக்கானதாகத் தான் இருக்கும். மற்றவர்களும் ஆப் அறிமுகம் செய்கிறார்கள். இப்போது நடிகர்கள் எல்லாம் திடீரென கிளம்பி ஆப்பில் அரசியல் செய்கிறார்கள்.

    அரசின் ஆப் எதற்காக?

    அரசின் ஆப் எதற்காக?

    நாங்கள் ஆப்பை அடிப்படை வசதிகளுக்கும், அதிகாரிகளை உடனுக்குடன் தொடர்பு கொள்வதற்கும் பயன்படுத்துகிறோம். ஆனால் அவர்களின் ஆப் அவர்களுக்கே ஆப்பு வைக்கும் நிலைக்கு தான் போய்விடும், இது தான் நடக்கும் என்றார்.

    கமலுடன் மோதும் ஜெயக்குமார்

    கமலுடன் மோதும் ஜெயக்குமார்

    நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார் அமைச்சர் ஜெயக்குமார். நடிகர் கமலுடன் கருத்து மோதலை ஏற்படுத்தி வரும் ஜெயக்குமார் இன்று நடிகர்களின் ஆப் குறித்து கேலி செய்துள்ளார்.

    போன் போடச் சொல்லுங்கள்

    போன் போடச் சொல்லுங்கள்

    கமலுக்கு வரலாறு தெரியவில்லை. வேண்டுமானால் எனக்கு போன் போட்டு தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள் என்று நேற்று ஜெயக்குமார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamilnadu fisheries minister Jayakumar says actors APP politics will endanger them only, government introducing apps for development and to reach the officials easily whereas actors doing politics in it he added.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X