For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒட்டுமில்லை, உறவுமில்லை என்றான பிறகு நடராஜனுக்கு ஏன் அஞ்சலி? ஜெயக்குமார்

ஒட்டுமில்லை, உறவுமில்லை என்றாகிவிட்ட பிறகு நடராஜனுக்கு அஞ்சலி செலுத்துவது சரியானதல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    எந்த உறவுமில்லை என்றான பின் நடராஜனுக்கு அஞ்சலி ஏன்? - ஜெயக்குமார்- வீடியோ

    சென்னை: ஒட்டுமில்லை, உறவுமில்லை என்றாகிவிட்ட பிறகு அதிமுகவினர் நடராஜனுக்கு அஞ்சலி செலுத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ரதயாத்திரை காட்டி எல்லாம் தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுவிட முடியாது என்று குறிப்பிட்டார்.

    Minister Jayakumar on Natarajans death

    மேலும், விஷ்வ ஹிந்து பரிஷித் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வந்தபோது எல்லாம் அவர்கள் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    ரதயாத்திரை வந்ததை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலே அதற்கு இவ்வளவு பெரிய விளம்பரம் கிடைத்திருக்காது. போராட்டத்தின் மூலம் அதற்கு பெரிய விளம்பரத்தை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார்கள் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், நடராஜனின் மறைவுக்கு அதிமுகவினர் இரங்கல் தெரிவிக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலா குடும்பத்தினருடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று முடிவெடுத்தபின் நடராஜன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Minister Jayakumar on Natarajan's death. He also added that, People wont accept them if ADMK pays homage to the death of M Natarajan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X