For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படி பேசாதீங்க வானதி.. டென்ஷனான ஜெயக்குமார்!

தமிழக அரசின் எந்த டெண்டரிலும் ஊழ்ல் நடக்கவில்லை வானதி சீனிவாசன் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    இப்படி பேசாதீங்க வானதி.. டென்ஷனான ஜெயக்குமார்!- வீடியோ

    சென்னை : தமிழக அரசின் எந்த ஒப்பந்தத்திலும் ஊழல் நடக்கவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பாஜகவின் வானதி சீனிவாசன் பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை சேத்துபட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : தமிழக அரசு முதல்வர் பழனிசாமியின் வழிகாட்டுதல்படி சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது. மக்கள் பிரச்னைகள் குறித்து அதிகாரிகள், அமைச்சர்களுக்கு அவ்வவோது முதல்வர் ஆலோசனை அளிப்பதால் அரசுத் துறை வேசமாக செயல்படுகிறது.

    ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய கடலோரக் காவல்படை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் விவகாரத்தை பொருத்தமட்டில் எப்போதுமே தமிழக அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    மீனவர் பிரச்னை

    மீனவர் பிரச்னை

    எல்லை தாண்டி செல்லும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று பல முறை இலங்கையிடம் வலியுறுத்தப்பட்டுவிட்டது. மீனவர்கள் மீதான தாக்குதல்களை எந்த நிலையிலும் ஏற்க முடியாது, இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமே சமரசம் ஏற்படுத்த முடியும். அதற்கான சூழல் உருவாகும்.

    பூதாகரமாக்குகின்றன

    பூதாகரமாக்குகின்றன

    ஆளுநர் ஆய்வு மேற்கொண்டதை எதிர்கட்சிகள் தேவையின்றி பூதாகரம் ஆக்குகின்றன. ஆளுநர் ஆய்வு மேற்கொண்டது என்பது சாதாரணமான நடைமுறையே என்றார்.

    பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது

    பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது

    ஆளுநரின் ஆய்வின் போது அவருடன் இருந்த பாஜன மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், தமிழகத்தில் ஊழல் கரை படிந்த ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டி இருந்ததற்கும், ஜெயக்குமார் பதிலளித்தார். வானதி சீனிவாசன் போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக அரசின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கக் கூடாது. அரசின் எந்த டெண்டரிலும் ஊழல் நடக்கவில்லை.

    எதிர்க்கட்சி என்பதால் இப்படியா?

    எதிர்க்கட்சி என்பதால் இப்படியா?

    இப்போதெல்லாம் ஒப்பந்த முறை இணைய வழியிலும் உள்ளது அதனால் எந்த ஊழலும் செய்ய முடியாது. எதிர்க்கட்சிகள் என்பதற்காக அரசு மீது பொத்தாம் பொதுவாக குறை சொல்லாமல் உண்மை நிலையை சொல்ல வேண்டும். போகிற போக்கில் அதிமுக அரசு மீது சேற்றை வாரி வீசுவதை அனுமதிக்க முடியாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    English summary
    Tamilnadu minister Jayakumar angered over BJP's Vanathi Srinivasan comment that government is corrupted and jayakumar replied for that its not true they were alleging charges as because they were opposition.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X