For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாஸ் கைது, எச் ராஜா நோ கைது.. அமைச்சர் கூறும் பகீர் காரணம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட காட்சிகள்- வீடியோ

    சென்னை: கருணாஸ் கைது செய்யப்பட்ட போதிலும் எச் ராஜா கைது செய்யப்படாதது ஏன் என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பகீர் காரணத்தை கூறியுள்ளார்.

    கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸார் மற்றும் முதல்வருக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசினார். மேலும் கொலை வெறியை தூண்டும் வகையில் அவர் பேசிய பேச்சு கேட்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    இதையடுத்து அவர் நேற்றைய தினம் நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கருணாஸை போல் போலீஸாரையும் நீதிமன்றத்தையும் அவமதித்து பேசிய எச் ராஜா இன்னும் கைது செய்யப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தகாத வார்த்தைகளால் பேச்சு

    தகாத வார்த்தைகளால் பேச்சு

    புதுக்கோட்டை மாவட்டம் , திருமயத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் தேவாலயத்துக்கு அருகில் மேடை போடுமாறு போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஹைகோர்ட்டாவது ம.... என கொச்சையாக பேசினார்.

    விளக்கம்

    விளக்கம்

    இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் கருணாஸை மட்டும் கைது செய்தது ஏன் என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

    சட்டம் ஒழுங்கு பிரச்சினை

    சட்டம் ஒழுங்கு பிரச்சினை

    அவர் கூறுகையில் எம்எல்ஏ என்பதால் கருணாஸின் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் பிரதிபலிக்கும். மேலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் வகையில் பேசியதால் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    வாயடைத்த மக்கள்

    வாயடைத்த மக்கள்

    ஆனால் எச் ராஜா எம்எல்ஏ இல்லை என்பதால் அவரது பேச்சுகள் மக்களிடம் போய் சேராது என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார். எச் ராஜாவை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்துள்ள விளக்கத்தால் மக்கள் வாயடைத்து போய் நிற்கின்றனர்.

    English summary
    Minister Kadambur Raju explains why H.Raja is not arrested? and Karunas is arrested for his aggressive comments.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X