For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடியில் விரைவில் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை.. அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி

தமிழகம் முழுவதும் விரைவில் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் விரைவில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி சுப்பையா வித்யலாயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு ஆட்சியர்வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அதிகாரி அனிதா வரவேற்றார்.

Minister Kadambur Raju says soon 3000 government schools will get smart classes

இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சுமார் ரூ.60 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பள்ளிகளில் விரைவில் நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள் திறக்கப்படும். மேலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாட திட்டங்களை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் நீட் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் தமிழக மாணவர்களாலும் பிரகாசிக்க முடியும். டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

துகுறித்து வரும் தகவல்கள் தவறானது. இதை பொது மக்கள் நம்ப வேண்டாம். விரைவில் தூத்துக்குடி தாலுகா அலுவகம் புதுப்பிக்கப்பட இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

English summary
Tamilnadu minister Kadambur Raju distributed free laptops to students at Tuticorin and assures that soon 3 thousand government schools will get smart classes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X