For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனவர் மீது துப்பாக்கிச் சூடு... நிர்மலா சீதாராமன், எச்.ராஜா, திண்டுக்கல் சீனிவாசன்.. பொய் அம்பலம்!

தமிழக மீனவர்களை சுட்டது இந்திய கடலோர காவல் படை என்று அதன் கமாண்டர் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து பொய்யாகி விட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்களை சுட்டது இந்திய கடலோர காவல் படை என்று அதன் கமாண்டர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் துப்பாக்கிச் சூடு குறித்து பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமன் படு கோபமாக கூறியது தற்போது பொய் என்றாகிவிட்டது.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடந்த வாரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அவர்களை நோக்கி கடலோர காவல் படையினர் வந்தனர். இதனால் பயந்த மீனவர்கள் கரை திரும்ப முயற்சித்தனர்.

அப்போது ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடலோர காவல் படையினர் சுட்டதாக கூறப்பட்டது. இதில் இரு மீனவர்கள் காயமடைந்தனர். எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டை நாங்கள் நடத்தவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினரே சுடுவதா என்று மக்கள் கொந்தளித்தனர்.

மீனவர்களுடன் பேச்சுவார்த்தை

மீனவர்களுடன் பேச்சுவார்த்தை

கடலோர காவல் படையினரின் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்தனர். அற்கு முன்னதாக மீனவ அமைப்புகளையும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரையும் கடலோர காவல் படையினர் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து துறைரீதியாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர்.

முரண்பட்ட கருத்து

முரண்பட்ட கருத்து

இதனிடையே சென்னையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. மேலும் அந்த ரப்பர் தோட்டா அவர்களுடையது அல்ல என்று தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஒத்துக் கொண்ட நிலையில் அவர் அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்லாரும்தான்

திண்டுக்கல்லாரும்தான்


தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமனின் செய்தி பதிவை மேற்கோள்காட்டி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ,
ரப்பர் குண்டுகள் சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் காவல்துறையிடம் தான் இருக்கும். ராணுவம் மற்றும் துணை ராணுவத்திடம் இருக்காது என்று ஆமாம் சாமி போட்டார். அதேபோல் சென்னையில் நடப்பதே தெரியாத அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் மத்திய அமைச்சரின் கருத்தே சரி என்றார்.

கமாண்டர் பேட்டி

கமாண்டர் பேட்டி

இந்நிலையில் தங்கச்சிமடத்தில் பேட்டி அளித்த கடலோர காவல் படை கமாண்டர் ராமாராவ், மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது இந்திய கடலோர காவல் படையினர் தான் என்றும் மீனவர்களால் மீட்கப்பட்ட 0.22 எம்எம் குண்டு எங்கள் படையினுடையதுதான் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஒன்றும் தெரியாமல் பேட்டி

ஒன்றும் தெரியாமல் பேட்டி

சம்பந்தப்பட்ட துறை அதிகாரியே இதுபோல் ஒப்புக் கொண்ட நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன், எச்.ராஜா, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கண்ணை மூடிக் கொண்டு ஒரு பொய்யை மெய்யாக்கி மக்களின் வாயை அடைக்க பார்த்துள்ளது அதிர்ச்சி தருகிறது. ஏன் இப்படி இவர்கள் பொய் சொன்னார்கள் என்றும் கேள்வி எழுகிறது.

நிர்மலா மன்னிப்பு கேட்பாரா

நிர்மலா மன்னிப்பு கேட்பாரா

அந்த, தோட்டா இந்த தோட்டா இல்லை. அவர்கள் சுடவே இல்லை என்று அடித்துக் கூறிய நிர்மலா சீதாராமன் தனது பேச்சுக்காக மீனவர்களிடம் மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ்ந்ததால் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியை தூக்கி எறிந்த சுரேஷ் பிரபுவும் பாஜகவில்தான் உள்ளார் என்பது ஏனோ நமக்கு இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.

English summary
As the Indian Coastal Guard's commander accepts that the guards shot Rameswaram fishermen. But last week Defence Minister Nirmala Sitharaman says that that rubber bullet does not belongs to coastal guard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X