For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெஞ்சு வலியால் துடித்த அமைச்சர் ஓஎஸ் மணியனின் ஓட்டுநர் டுவீலரில் இருந்து விழுந்து மரணம்

நெஞ்சு வலியால் துடித்த அமைச்சர் ஓ.எஸ் மணியனின் ஓட்டுநர் டுவீலரில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சரின் ஓட்டுநர் நெஞ்சுவலியால் டூவீலரில் இருந்து விழுந்து மரணம்-

    சென்னை: நெஞ்சு வலியால் துடித்த அமைச்சர் ஓ.எஸ் மணியனின் ஓட்டுநர் டுவீலரில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமைச்சர் ஓஎஸ் மணியனின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் சவுந்திரராஜன். 33 வயதான இவது சொந்த ஊர் செஞ்சி ஆகும். தனது குடும்பத்துடன், சென்னை சூளைமேட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    Minister OS Maniyan's driver Soundirarajan died after fell down from Two wheeler by chest pain

    இன்று காலை அமைச்சரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் பணியில் இருந்தபோது ஓட்டுநர் சவுந்திரராஜனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதனால் துடிதுடித்த அமைச்சர் சவுந்திரராஜனை அமைச்சரின் வீட்டில் இருந்த பாதுகாப்பு அதிகாரி காரில் அழைத்துச் செல்லாமல், தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சவுந்திரராஜன் வலி தாங்கமுடியாமல் வண்டியிலிருந்து கீழே விழுந்தார். இதில் மண்டை உடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த சவுந்திரராஜனுக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

    அமைச்சரை திருப்பி அனுப்பிய உறவினர்கள்

    இதற்கிடையே, செளந்தரராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர் ஓ.எஸ். மணியன் அவரது இல்லத்திற்குச் சென்றார். ஆனால் அவரை அங்கு அனுமதிக்க உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் குதித்ததால் அமைச்சர் திரும்பிச் சென்றார்.

    English summary
    Minister OS Maniyan's driver Soundirarajan died after fell down from Two wheeler by chest pain. Soundirarajan was having chest pain so he has gone to hospital by two wheeler with some one from Minister OS Maniyan house.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X