For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை ஆவினில் அமைச்சர் அதிரடி ஆய்வு

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் பி.வி. ரமணா நெல்லை ஆவினில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை ஆவினிக்கு வந்த அமைச்சர் ரமணா கூறுகையில், நெல்லை மாவட்ட பால் உற்பத்தியாளர் ஓன்றியத்திற்கு ரூ.6 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Minister P V Ramana inspects Nellai Aaavin

கடந்த 4 வருடங்களாக பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை வழங்கியுள்ளார். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க ஆலோசிக்கப்பட்டது. இங்கு பால் கையாளும் திறன் 1 லட்சம் லீட்டர் மட்டுமே உள்ளது. இதனை அதிகப்படுத்தி 1.5 லட்சம் லிட்டராக உயர்ந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பால் குளிர்விக்கும் கலனை 30 ஆயிரம் லிட்டர் கூடுதலாகவும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நீதிமன்றத்தின் எதிரில் ரூ,.50 லட்சத்தில் ஹைடெக் பாலகம் கட்டப்பட்டு வருகிறது. வரும் டிசம்பரில் இந்த பணி முடிவடையும். வரும் தீபாவளி பண்டிகைக்கு அந்த பாலகம் திறக்கப்படும்.

தீபாவளி பண்டிகைக்கு பால்கோவா, நெய், வெண்ணெய் போன்றவை தொய்வில்லாமல் கிடைக்கவும் வி்ற்பனையை 4 மடங்கு உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வரின் விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தில் 4913 கறவை மாடுகள் வழங்கப்பட்டு நாள் ஓன்றுக்கு 6050 லிட்டர் பால்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றார் அவர்.

English summary
TN Minister P V Ramana inspected Nellai Aaavin yesterday and took note of the stock .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X