For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் ஓபிஎஸ் மீது நம்பிக்கை இல்லையா? அமைச்சர் உதயகுமாரின் பரபரப்பு பேட்டி

அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பிரத்யேக பேட்டி இன்று காலை 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக புதிய தலைமுறை டிவி அறிவித்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா வரவேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வருவாய்த்துறை ஆர்.பி.உதயகுமார் புதிய தலைமுறை தொலைக்காட்சி சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவி இன்னும் காலியாகவே உள்ளது. கட்சியின் அதிகாரமிக்க அந்த பதவிக்கு தற்போது சசிகலா மட்டுமே அடிபடுகிறது.

 Minister R.B.Udayakumar special interview on puthiya thalimurai tv

அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவே வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே திடீரென சசிகலா முதல்வராக பொறுப்பேற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்றும் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார். நேற்று வரை அதிமுகவிற்கு பொதுச்செயலாளராக வேண்டும் என்று சசிகலாவிற்கு கோரிக்கை வைத்தவர்கள் தற்போது முதல்வராக வேண்டும் என்று கூறி வருவது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையை வெளிப்படையாக தெரிவித்துள்ளாதாக கூறப்படுகிறது. இன்று காலை 9 மணிக்கு இந்தப் பேட்டியன் முழுபதிவும் ஒளிபரப்பாக உள்ளது.

English summary
Minister R.B.Udayakumar said, sasikala to take incharge of Tamil Nadu Chief Minister
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X