For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவசரமானாலும் அடக்குங்கள்... வெளியே போனால் சைக்கிள் கிடையாது.. அமைச்சர் பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    அவசரமானாலும் அடக்குங்கள்... இல்லைனா சைக்கிள் கிடையாது-அமைச்சரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு!- வீடியோ

    திருப்பரங்குன்றம்: அவசரமாக இருந்தாலும் அடக்குங்கள், வெளியே போனால் சைக்கிள் கிடையாது என அமைச்சர் ஆர் பி உதயகுமார் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

    திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் பெண்களுக்கான சைக்கிள் பேரணி பிரசாரம் நடைபெற்றது. இதில் பங்கேற்கும் பெண்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பெண்கள் முண்டியடித்துக் கொண்டு வருகை தந்தனர்.

    சிறுநீர் கழிக்க

    சிறுநீர் கழிக்க

    இதனால் ஏராளமான பெண்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில் ஆத்திரத்தை அடக்கினாலும் ஒன்றை அடக்க முடியாது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். யாராவது சிறுநீர் கழிக்க வெளியே சென்றால் அவர்களுக்கு சைக்கிள் கிடையாது.

    விதிகள்

    விதிகள்

    இது அம்மா பேரவையின் மிகவும் கண்டிப்பான உத்தரவாகும். பச்சைக் கொடியை காட்டும்போது சைக்கிள் பக்கத்தில் இருப்போருக்குத்தான் சைக்கிள். என்னப்பா சைக்கிளை காட்டி காட்டி மிரட்டுற என நீங்கள் சொல்லக் கூடாது. ஏனென்றால் ஒரு கட்டுப்பாடு, ஒழுக்கம் இருக்க வேண்டும். அதற்குதான் இந்த விதிகள் போடப்படுகின்றன என்றார் அமைச்சர்.

    அதிருப்தி

    அதிருப்தி

    சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டு இலவச சைக்கிளை பெற பெண்கள் காலை 5 மணிக்கெல்லாம் வந்துவிட்டனர். எனினும் விழாவை தொடங்காமல் 6 மணி நேரமாக பெண்களை காக்க வைத்திருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.

    வாழ்த்து

    வாழ்த்து

    இதுபோல் இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கிறார். தந்தையை இழந்த பாஜக தேசிய செயலர் எச் ராஜாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்ததாக அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

    English summary
    Minister R.B.Udhayakumar says that no cycle will be issued to those who are not with the cycle when green flag waves.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X