For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் டைமிங்.. ரைமிங்.. ஒரு ஷாக் பேட்டி

ஒட்டப்பிடாரம் வெற்றி குறித்து ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

ஒட்டப்பிடாரம்: டைமிங்.. ரைமிங்.. எல்லாம் சரிதான்.. ஆனா புருடா விடறதுக்கு ஒரு அளவு வேணாமா? ஏதோ சொல்லணுமேன்னு ஒரு பேட்டி கொடுத்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

இன்னும் சில தினங்களில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க போகிறது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன் போட்டியிடுகிறார். இதையொட்டி அங்கு அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒட்டப்பிடாரம் வெற்றி குறித்து ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

Minister Rajendra Balaji said we will win in Ottapidaram by 70 thousands votes different

ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ராஜேந்திர பாலாஜி கூறியதால் அதிமுக அதிர்ச்சியில் உள்ளதாம். இந்த தொகுதியில் அதிமுக, புதிய தமிழகம் நிர்வாகிகள்தான் அதிகமாக இருக்காங்க. எங்க கூட்டணியில் இருக்கிற தேமுதிகவினரும் இங்கு நிறைய பேர் உள்ளனர்.

 முதல்வர் பழனிச்சாமியை கொடைக்கானலில் கொல்ல போகிறோம்.. மர்ம நபர் மிரட்டல்.. போலீஸ் விசாரணை! முதல்வர் பழனிச்சாமியை கொடைக்கானலில் கொல்ல போகிறோம்.. மர்ம நபர் மிரட்டல்.. போலீஸ் விசாரணை!

இந்த தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை.. புரட்சி தலைவரின் வெற்றிக் கோட்டை.. அம்மாவின் இரும்பு கோட்டை... எடப்பாடியின் எஃகு கோட்டை.." என்று டைமிங்காக பேசியவர் திடீரென "அதிமுக இங்கு 70 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். திமுக டெபாசிட் இழக்கும்.. திமுக மட்டுமில்லை.. எல்லா கட்சியுமே இந்த தொகுதியில் டெபாசிட் இழக்கும்" என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றார். அமைச்சரின் இந்த பேட்டியால் அனைவருமே ஷாக் ஆகிவிட்டார்.

ஏனெனில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் மொத்தமே 2 லட்சத்து 27 ஆயிரம் ஓட்டுக்கள்தான் உள்ளன. இதில் எப்படி அதிமுக 70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என்று அமைச்சர் சொன்னார் தெரியவில்லையே என இன்னமும் தொகுதி மக்கள் யோசித்து கொண்டே இருக்கிறார்களாம்!

English summary
Minister Rajendra Balajis controversy speech about Ottappidaram Constitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X