For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எண்ணூரில் கமல்ஹாசன் பார்வையிட்டதில் மக்கள் நலன் இல்லை- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிரடி

எண்ணூரில் நடிகர் கமல்ஹாசன் பார்வையிட்டதில் மக்கள் நலன் இல்லை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: எண்ணூரில் நடிகர் கமல்ஹாசன் பார்வையிட்டதில் மக்கள் நலன் இல்லை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் எண்ணூர் துறைமுகப் பகுதியில் நேற்று காலை பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த மக்களிடமும் அவர் குறைகளை கேட்டறிந்தார்.

Minister Rb Udhayakumar condemns Actor Kamal for visiting Ennore port

கமலின் இந்த அதிரடிக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்பி உதயக்குமார் நடிகர் கமல்ஹாசன் எண்ணூர் துறைமுகத்தில் பார்வையிட்டது சொந்த நலனுக்காகத்தான் என்றார்.

அவர் எண்ணூர் துறைமுகத்தை பார்வையிட்டதில் எந்த மக்கள் நலனும் இல்லை என்றும் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கூறினார். மேலும் வதந்திகளை கிளப்பிட கமல் முயற்சி செய்வதாகவும் கூறிய ஆர்பி உதயக்குமார், அவரது கனவு பலிக்காது என்றும் கூறினார்.

நிலவேம்பு கசாயம் விவகாரத்தில் கமல் கூறியது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும் தினகரன் கூறியது எதுவுமே இதுவரை நடக்கவில்லை என்றும் ஆர்பி உதயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

English summary
Minister RP Udhayakumar condemns Actor Kamal for visiting Ennore port. He said Kamal visited Ennore Port for his sack not public.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X