For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரன் ஒரு பிளாக்மெயிலர்.. ஜெ.வையே மிரட்டியவருக்கு நாங்கள் எம்மாத்திரம்? ஆர்பி உதயக்குமார் அதிரடி!

அமைச்சர் ஆர்பி உதயக்குமார் டிடிவி தினகரன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    டிடிவி தினகரன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறும் ஆர்பி உதயக்குமார்-வீடியோ

    மதுரை: அமைச்சர் ஆர்பி உதயக்குமார் டிடிவி தினகரன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். ஜெயலலிதாவையே மிரட்டிய தினகரனுக்கு நாங்கள் எம்மாத்திரம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரதில் அதிமுக கட்சி ஊழியர் கூட்டத்தில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

    Minister RB Udhayakumar has met press in Madurai

    அப்போது நக்கீரன் கோபால் கைது செய்த காவல்துறை எச்.ராஜா, எஸ்வி.சேகர் போன்றவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்பி உதயக்குமார் புகார் அளித்த வழக்கின் அடிப்படையில் காவல்துறை செயல்படுகிறது.

    குற்றச்சாட்டின் அடிப்படையில் காவல்துறை நீதிமன்றதின் முன் ஆஜர்படுத்தி நீதிமன்றம் எடுக்கும் முடிவை யாரும் தடுக்க முடியாது. நீதிமன்றத்தை யாரும் குறை சொல்ல முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் காவல்துறை நீதிமன்ற வழிகாட்டுதல் படி செயல்படும், எந்த சட்டபிரிவு என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும்.

    [நக்கீரன் கோபால் கைதில் ஆளுநருக்கு ஆதரவாக பேசிய டிடிவி தினகரன்.. என்ன காரணம்?]

    6 மாதத்திற்கு முன் நடந்தது, 5 முறை முதல்வராக இருந்தவர் இறந்தது அனைவருக்கும் தெரியும். அவருடைய இறப்பு சான்றிதழ் கொடுத்ததை வைத்து நீதி ஆனாலும் அவர் மீது உள்ள 13 அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை. நீதிமன்றத்திற்கு காவல்துறை நடவடிக்கை குறித்து அளிக்கப்பட்டாலும், வழக்கின் தன்மையை தீர்மானித்தது முகாந்திரம் இல்லாமல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காது.

    டிடிவி தினகரன் மற்றும் விஜயபாஸ்கர் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆர்பி உதயக்குமார், டிடிவி தினகரன் பலம் இழந்தவர், செல்வாக்கு இழந்தவர், ஊடகத்துறை கவனத்தை திருப்ப செயல்படுகிறார். நிகழ்ந்த சந்திப்பு குறித்து உடனே கூறாமல் அதன் மூலம் பயன் பெற பிளாக் மெயில் செய்கிறார். அவர் ஒரு பிளாக் மெயிலர், ஜெலலிதாவையே மிரட்டியவர்கள் எங்களை விடுவார்களா?

    இது அரசியல் பணி அல்ல, மக்கள் பணி அல்ல, தினகரன் ஊடகத்துறையை தன் பக்கம் ஈர்ப்பதற்கு தகாத முறையில், அநாகரிகமாக நடந்து கொள்கிறார். இது நல்லதல்ல. தமிழ் நாட்டிற்கு சாபகேடு மக்கள் கொதித்து போய் உள்ளனர். உண்மையானவர் என்றால் சந்தித்த உடனே தெரியபடுத்த வேண்டும். முதல்வர், துணை முதல்வர் மீது பல தவறான தகவல்களை தற்பொழுது வெற்றிவேல் மூலம் கூறியுள்ளார். என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

    English summary
    Minister RB Udhayakumar has met press in Madurai. Minister RB Udhayakumar said TTV Dinakaran is blackmailer. He threatened Jayalalitha also.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X