For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் எய்ட்ஸ் மருத்துவமனையா? எய்ம்ஸை எய்ட்ஸ் என்று கூறி அதிர்ச்சி கிளப்பிய அமைச்சர்!!

அமைச்சர் செல்லூர் ராஜூ எய்ம்ஸ் மருத்துவமனை என்பதற்கு பதிலாக, மதுரையில் ‘எய்ட்ஸ்’ மருத்துவமனை அமைய உள்ளதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    எய்ம்ஸை எய்ட்ஸ் என்று கூறி அதிர்ச்சி கிளப்பிய செல்லூர் ராஜூ-வீடியோ

    மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜூ எய்ம்ஸ் மருத்துவமனை என்பதற்கு பதிலாக, மதுரையில் 'எய்ட்ஸ்' மருத்துவமனை அமைய உள்ளதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அமைச்சர் செல்லூர் ராஜூ அவ்வப்போது ஏதாவது ஒன்றை பேசி எப்போதும் டைம்லைனிலேயே இருந்து வருகிறார். அவரது பேச்சுக்கள் ஒன்று அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாகும் அல்லது சமூக வலைதளங்களில் ட்ரோல் ஆகும்.

    [ இது சின்ன விஷயம் இல்லை.. எழுந்து நின்று பாராட்டுவோம் இந்த மாபெரும் ஆசிரியைகளை! ]

    அமைச்சர் செல்லூர் ராஜூ ஏதாவது வார்த்தையை விட மாட்டாரா மீம்ஸ் கிரியேட் பண்ண முடியாதா என காத்துக்கொண்டிருக்கின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். அவர்களுக்கு அவ்வப்போது தீனி போட்டு வருகிறார் அமைச்சர்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ

    அமைச்சர் செல்லூர் ராஜூ

    அமைச்சரின் இந்த பேச்சை கேட்டவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையா அல்லது எய்ட்ஸ் மருத்துவமனையா என முனுமுனுக்க தொடங்கினர். அமைச்சர் செல்லூர் ராஜூ எய்ம்ஸ் மருத்துவமனையை வாய் தவறி எய்ட்ஸ் மருத்துவமனை என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழகம் முதலிடம்

    தமிழகம் முதலிடம்

    அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது, தமிழ்நாட்டுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.

    மாதம்தோறும் விழா

    மாதம்தோறும் விழா

    ஜனவரியில் தமிழகம் முழுவதும் பொங்கல் சுற்றுலா விழா, பொள்ளாச்சியில் வெப்பக்காற்று பலூன் விழா, மணப்பாட்டில் படகு மற்றும் நீர்சறுக்கு திருவிழா, குற்றாலத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சாரல் திருவிழா போன்றவை கொண்டாடுவது போன்று உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.

    எய்ட்ஸ் மருத்துவமனை

    எய்ட்ஸ் மருத்துவமனை

    முதல்வர் எத்தனையோ திட்டங்களை மதுரைக்கு கொண்டு வந்துள்ளார். பல திட்டங்கள் இங்கு வந்துள்ளது. அந்த மாதிரி திட்டங்களில் மதுரையில் ‘‘எய்ட்ஸ் மருத்துவமனை'' நாம் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் ரூ.1,500 கோடியில் அமைய இருக்கிறது" என்றார்

    மக்கள் அதிர்ச்சி

    மக்கள் அதிர்ச்சி

    அமைச்சரின் இந்த பேச்சை கேட்டவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையா அல்லது எய்ட்ஸ் மருத்துவமனையா என முனுமுனுக்க தொடங்கினர். அமைச்சர் செல்லூர் ராஜூ எய்ம்ஸ் மருத்துவமனையை வாய் தவறி எய்ட்ஸ் மருத்துவமன என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Minsiter Sellur Raju has said that AIDS hospital comes to Madurai instead of AIMS.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X