For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. கை காட்டியோரை சாமியா மதிப்போம்.. எதிர்த்தோரை சாணியா மிதிப்போம்.. செம ராஜு!

ஜெயலலிதா கை காட்டும் நபரை சாமியாகவும் அவர் எதிர்ப்போரை சாணியாகவும் மிதிக்க தெரியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சாமி..சாணி...செல்லூர் ராஜுவின் பஞ்ச்- வீடியோ

    சென்னை: ஜெயலலிதா கை காட்டும் நபரை சாமியாகவும் அவர் எதிர்ப்போரை சாணியாகவும் தங்களுக்கு மிதிக்க தெரியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

    மதுரை தெற்குமாசி வீதியில் அதிமுக சார்பில் ஜெயலலிதா 70 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்ட விழா மேடையில் பைனான்சியர் அன்புச்செழியனும் அமர்ந்திருந்தார்.

    இந்த விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், இந்தியா முழுவதும் மோடி அலை வீசியபோது தமிழகத்தில் மட்டும்தான் லேடி அலை வீசியது. ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என தமிழக மக்கள் விரும்பினர்.

    பாராட்டு

    பாராட்டு

    ஆளுநர் பன்வாரிலால் தமிழக அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். எதிர்க்கட்சிகள் அவரின் நடவடிக்கையை குறை கூறினாலும், அவர் தமிழக அரசை பாராட்டி உள்ளார்.

    கமல்ஹாசனுக்கு கூட்டம் இல்லை

    கமல்ஹாசனுக்கு கூட்டம் இல்லை

    நடிகர்கள் எல்லாம் கட்சியை ஆரம்பிச்சுட்டாங்க. எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த போது மக்கள் வெள்ளத்தில் வந்தார். ஆனால் நடிகர் கமல்ஹாசன் மதுரையில் நடத்திய கூட்டத்தில் கூட்டமே இல்லை.

    நல்ல பழக்கங்கள்

    நல்ல பழக்கங்கள்

    இன்னும் ரஜினிகாந்த், விஷால் எல்லாம் கட்சியை ஆரம்பிக்கப்போகிறார்களாம். ரஜினியும், கமலும் திரைப்படங்களில் ஒழுக்கத்தை சொல்லித் தந்தவர்கள் இல்லை. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எங்களுக்கு நல்ல பழக்கங்களை தந்தனர்.

    நல்லதை செய்வார்கள்

    நல்லதை செய்வார்கள்

    அதனால் எங்களுக்கு கெட்ட பழக்கம் இதுவரை கிடையாது. திரைப்படங்களில் ஒழுக்கத்தை சொல்லித்தராதவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்தால் நல்லதை செய்வார்கள்.

    சாணியாகவும் நடத்த தெரியும்

    சாணியாகவும் நடத்த தெரியும்

    ஜெயலலிதா கை காட்டும் நபரை சாமியாக மதிப்போம். அதே நேரத்தில் அவர் எதிர்க்கும் நபரை சாணியாகவும் மிதிக்க தெரிந்துள்ளோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

    English summary
    Minister Sellur Raju says that they know how to behave the one who indicated by Jayalalitha and one who opposes by her.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X