For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் தேர்வு கேள்வி...பதில் சொல்லாமல் எழுந்து போன கே.ஏ செங்கோட்டையன்

நீட் தொடர்பான கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆனார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். இன்று பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. அப்போது ஆய்வில் ஈடுபட்ட அமைச்சரிடம் செய்தியாளர்கள் நீட் தொடர்பான கேள்விக் கே

Google Oneindia Tamil News

சென்னை: இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று தொடங்கியுள்ளது.

இத்தேர்வை 8 லட்சத்து 98 ஆயிரம் மாணவ - மாணவியர் எழுதுகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் தொடங்கியுள்ள இந்தத் தேர்வு இன்று தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை 6, 737 பள்ளிகள் மூலம் மொத்தம் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 பேர் எழுதுகின்றனர்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து சென்னை எழும்பூர் பிரசிடென்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார்.

ஊக்கத் தொகை

ஊக்கத் தொகை

அப்போது செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் பேசும் போது, தமிழகத்தில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவதால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் படிக்கின்றனர் என்று கூறினார்.

10 மொழிகளில் தேர்வு

10 மொழிகளில் தேர்வு

பிறமொழி மாணவர்கள் தங்களது தாய்மொழியிலேயே தேர்வு எழுதலாம் என்ற நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிறமொழி மாணவர்கள் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தேர்வு எழுதலாம். அதன்வகையில் இந்த ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் உட்பட 10 மொழிகளில் தேர்வு எழுதுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

கூடுதல் மாணவர்கள்

கூடுதல் மாணவர்கள்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 65 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர் என்று செங்கோட்டையன் கூறினார். தொடர்ந்து பல்வேறு கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையனிடம் நீட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

எஸ்கேப்

எஸ்கேப்

அதற்கு அனைத்து மாணவர்களும் நீட் தேர்வு எழுத தயாரான நிலையில் இருப்பதாகக் கூறிவிட்டு, டக்கென்று கிளம்பி விட்டார். கேள்விக்கான பதிலை முறையாக சொல்லவில்லை. அவருடன் இருந்த செயலாளர் சபிதாவும் சிரித்துக் கொண்டே செய்தியாளர் சந்திப்பில் இருந்து எழுந்து சென்றுவிட்டார்.

English summary
When reporters asked about NEET related question, Education Minister Sengottaiyan has gone from press meet..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X