For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குன்னூர் விபத்து.. சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல்

குன்னூர் விபத்தில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பேருந்து விபத்து குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறுப்பு-வீடியோ

    கோவை: குன்னூர் விபத்தில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அரசு பேருந்துகள் சரியான முறையில் பராமரிக்கப்படாத காரணத்தால்தான் உதகையில் பேருந்து விபத்து ஏற்பட்டதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் வேலுமணி மறுப்பு தெரிவித்தார்.

    உதகையில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி, கோவை அவரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நேரில் பார்வையிட்டார்.

    minister velumani met the injured people in the coonoor accident in kovai

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

    பேருந்து கவிழ்ந்த விபத்தில் கோவையில் 15 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 6 பேர் உடல் நலம் தேறி வீட்டுக்கு சென்றுள்ளனர். இருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவகுழு நியமிப்பட்டுள்ளது.

    வால்பாறையில் சிறுத்தை தாக்கிய பெண்ணிற்கும், கூடலூரில் யானை தாக்கிய ஒருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தர்வர்களுக்கு நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தர்வகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சை வழங்கவும் மருத்துவக் குழுவிற்கு வலியுறுத்தி உள்ளார்.

    நேற்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் 900 பேருக்கு விபத்துக்களால் உண்டான பாதிப்புகளுக்கும் இயற்கை இயற்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல விபத்தில் இறந்த மற்றும் காயமுற்றவர்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

    English summary
    Minister Velumani met the injured people in the Coonoor accident in Kovai govt.Hospital
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X