For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயபாஸ்கர் அப்பாவிடம் 5 மணிநேரம் துருவித்துருவி விசாரித்த வருமான வரித்துறை- வீடியோ

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதனடிப்படையில் அவரின் அப்பா சின்னத்தம்பி, அண்ணன் உதயகுமார் ஆகியோரிடம்

By Suganthi
Google Oneindia Tamil News

திருச்சி: அமைச்சர் விஜயபாஸ்கர் அப்பா மற்றும் அண்ணனிடம் வருமான வரித்துறையினர் 5 மணிநேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், துருவித்துருவி அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வி கேட்டுள்ளனர்.

வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அமைச்சர் விஜயபாஸ்கர், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், விஜயபாஸ்கரின் உதவியாளர் மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தினர்.

 Minister Vijaya baskar's father and brother inquired by Income tax officials

இதில் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டம் புதுகோட்டையில் உள்ள அவரது வீடு, அலுவலகம், கல்குவாரி ஆகிய இடங்களில் அதிகாரிகள் பல மணிநேரம் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.

அதையடுத்து விஜயபாஸ்கரின் அப்பா சின்னத்தம்பி, அண்ணன் உதயகுமார் ஆகிய இருவரையும் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து, 5 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்களிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

மேலும், விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வர வேண்டும் என்கிற உத்தரவிட்டு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து கூறிய விஜயபாஸ்கர் அப்பா சின்னத்தம்பி, எங்களிடம் ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்தன. கணக்கு வழக்குகளும் சரியாக இருந்தன. ஆகையால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என கூறினார்.

English summary
In Trichy income tax department officials inquired Minister Vijaya baskar's Father Chinnathambi and brother Udhayakumar for about 5 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X