For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காய்ச்சல்னா உடனே கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு வாங்க.. மக்களுக்கு விஜயபாஸ்கர் கோரிக்கை

காய்ச்சல் வந்தவுடன் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சேலம்: காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சேலம், திருவண்ணாமலை, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் டெங்குவைக் கட்டுப்படுத்துவது சவாலக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

Minister Vijayabaskar requested people to come government hospital for fever

அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் காய்ச்சல் வந்தால் உடனே அருகில் இருக்கும் மெடிக்கல் கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். காய்ச்சல் வந்தவுடனேயே அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்.

அரசு மருத்துவமனையில் காலை, மாலை என இருவேலை ரத்த பரிசோதனை செய்கிறார்கள். இதனால் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் என்ணிக்கை 20,000க்கும் குறைவாக குறைந்து போயிருந்தால் உடனே தகுந்த சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் வசதி உள்ளது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் இந்த வசதி குறைவாகவே உள்ளது.

ஆகையால் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு அவ்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம். டெங்கு கொசு நல்ல தண்ணீரில் வளரக் கூடியது மட்டுமில்லாமல் பகலில் தான் கடிக்கும். ஆகையால் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் என கூறினார்.

English summary
People who get fever should come immediately to government hospital told Minister Vijayabhaskar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X