திருவள்ளூரில் கண் அறுவை சிகிச்சை நிறுத்தம்: ஸ்டாலின் புகார் மீது நடவடிக்கை- விஜயபாஸ்கர் உறுதி
சென்னை: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் எழுப்பிய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்துப் விஜயபாஸ்கர் பேசியதாவது: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை தொடர்பான மு.க.ஸ்டாலின் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய கண் ஒளி சிகிச்சை திட்டத்தின் கீழ் கண் அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 5.5 லட்சம் நபர்களுக்கு தமிழகத்தில் கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
மேட்டூர் அரசு கண் மருத்துவமனையில் தற்காலிகமாக கண் அறுவை சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கண் பார்வை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயர் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications