For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதா..குடியரசுத் தலைவரால் நிறுத்திவைப்பு..சட்டசபையில் அமைச்சர் பதில்

நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதா குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதா குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதா குறித்து உறுப்பினர் கேள்வி கேட்டார். அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

Minister Vijayabaskar says that Neet exemption bill is awaiting

அவர் கூறுகையில் நீட்டில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரிய மசோதாவானது குடியரசுத் தலைவரால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மருத்துவ சேர்க்கைக்கு நீட் எனும் தேசிய தகுதி காண் தேர்வை மத்திய அரசு தமிழகத்தில் கட்டாயமாக்கியது. கடந்த மே மாதம் தமிழகத்தில் 2-ஆவது ஆண்டாக நீட் தேர்வு நடத்தப்பட்டது.

நீட் தேர்வால் மருத்துவ கனவுடன் வரும் மாணவிகள் உயிரை மாய்த்து கொள்ளும் நிலை உள்ளது. இதனால் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக சட்டசபையில் நிறைவேற்ற தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Minister Vijayabaskar says in assembly that Exemption bill from Neetis awaiting because of President.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X