For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொறியியல் படித்துவிட்டு பிரசவம் பார்த்தால் அதை அனுமதிக்க முடியாது- விஜயபாஸ்கர்

பொறியியல் படித்துவிட்டு பிரசவம் பார்த்தால் அதை அனுமதிக்க முடியாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: பொறியியல் படித்துவிட்டு பிரசவம் பார்த்தால் அதை அனுமதிக்க முடியாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி என்பது தொடர்பான பயிற்சி வகுப்புக்கு ஹீலர் பாஸ்கர் அறிவித்தார். இதையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம் அந்த பயிற்சி வகுப்பை ரத்து செய்தது.

Minister Vijayabaskar says that no one see delivery except doctors and nurses

பின்னர் ஹீலர் பாஸ்கரை கோவை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் ஹீலர் பாஸ்கரை விடுதலை செய்ய வேண்டும் என சீமான் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் தடுப்பூசி கொண்டுவரும்போது அதையும் விஷமிகள் எதிர்த்தனர். பேறுகால சிகிச்சையை தடுக்கும் யாராக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

பேறுகால மரணங்கள் முன்பு 400க்கும் மேலாக இருந்தது, இப்போது குறைந்துள்ளன. எம்பிபிஎஸ் படித்த டாக்டர், நர்சுகளை தவிர பிரசவத்திற்கு யார் முயற்சி செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொறியியல் படிப்பை படித்துவிட்டு பேறுகாலம் பார்க்கிறேன் என்றால் அனுமதிக்க முடியாது என்றார் விஜயபாஸ்கர்.

English summary
Minister Vijayabaskar says that we accept the person who studies Engineering, sees delivery for pregnant ladies. Deliveries to be seen only Doctors and Nurses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X