For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரும் 27ம் தேதி முதல் 28 வரை நீடிக்கும்.. வருகிறது இந்த நூற்றாண்டிலேயே மிக நீண்ட சந்திர கிரகணம்!

இந்த நூற்றாண்டி மிக நீண்ட முழு சந்திர கிரகணம் ஜூலை 27 – 28 இல் நிகழ உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் இந்த 27ம் தேதி நிகழ்கிறது

    டெல்லி: இந்த நூற்றாண்டிலேயே மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சந்திர கிரகணம் இந்தியாவில் ஜூலை 27 ஆம் தேதி இரவு முதல் ஜூலை 28 ஆம் தேதி அதிகாலை வரை நிகழ உள்ளது என புவியியல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

    சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

    Ministry of Earth Sciences: A total lunar eclipse will occur on July 27-28, 2018

    இந்த ஆண்டு சந்திர கிரகணம் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், மீண்டும் ஜூலை 27 ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

    இந்த சந்திர கிரகணம் குறித்து இந்திய புவியியல் அமைச்சகம் அறிவித்திருப்பதாவது: இந்த நூற்றாண்டின் மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சந்திர கிரகணம் வரும் 27 ஆம் தேதி பின்னிரவு முதல் 28 ஆம் தேதி அதிகாலை வரை நிகழ உள்ளது. முழு சந்திர கிரகணத்தை இந்தியா முழுவதும் பார்க்கலாம். சந்திர கிரகணத்தின் போது நிலவு சிவப்பாக இருள் படந்து காணப்படும்.

    இந்த சந்திர கிரகணம் ஆசியா, ஆஸ்திரேலியா, ரஷ்யாவின் வட பகுதியைத் தவிர, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, கிழக்கு தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய பகுதிகளிலும் இந்த சந்திர கிரகணம் தோன்றும்.

    ஜூலை 27, 28 தேதிகளில் நிகழும் இந்த முழு சந்திர கிரகணம் ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் மிக நீண்ட நேரம் நிடிக்கிறது. பொது ஆண்டு 2001 முதல் 2100 வரை இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த, மற்றும் நிகழ உள்ள மொத்த சந்திர கிரணங்களின் நேரத்தை காட்டிலும் இந்த சந்திர கிரகணமே மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரகணம். கிரகணம் ஜூலை 27 ஆம் தேதி பின்னிரவு 11.54 மணிக்கு தொடங்கும் என்று புவியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    English summary
    Ministry of Earth Sciences says, A total lunar eclipse will occur on July 27-28, 2018 with a total duration of 1 hour 43 minutes. The duration makes it the longest total lunar eclipse of this century (2001 AD to 2100 AD)
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X