For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விநாயகர் சதுர்த்தி.. ஸ்டாலினுக்கு செக் வைக்கும் அழகிரி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலினுக்கு செக் வைக்கும் அழகிரி

    சென்னை: விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை திமுக தலைவராக உள்ள ஸ்டாலின் நான்கு வருடங்கள் முன்பு திரும்ப பெற்றார். ஆனால், மு.க.அழகிரி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    2014ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திமுக பொருளாளராக அப்போது பதவி வகித்த, ஸ்டாலினின், அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் "Greetings to all on the occasion of Vinayaka Chaturthi!" என்று பதிவிட்டப்பட்டிருந்தது.

    இந்த பதிவு அப்போது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

    விளக்கம்

    விளக்கம்

    இதற்கு கருணாநிதி கடும் அதிருப்தி வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது. இதையடுத்து, திமுக தலைமை கழகம் விடுத்த செய்தி குறிப்பில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிரத்யேக இணைய தளத்தில், அவர் விநாயகர் சதுர்த்தி நாளன்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி, மு.க.ஸ்டாலினின் இணைய தளத்தை பராமரிக்கின்ற சில தோழர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக, எல்லோரும் தெரிவித்திருப்பதைப் போல மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்,' எனக் கூறப்பட்டிருந்தது.

    அதிருப்தி

    அதிருப்தி

    இதன் காரணமாக, ஸ்டாலின் மீதும், திமுக தலைமை மீதும் இந்துக்களில் சிலருக்கு அப்போது அதிருப்தி ஏற்பட்டிருந்தது. சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை அவர்கள் தெரிவித்தனர்.

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

    அதன்பிறகு விநாயகர் சதுர்த்தி உட்பட இந்துக்கள் பண்டிகைகளுக்கு எப்போதும்போலவே, திமுகவோ, ஸ்டாலினோ வாழ்த்து கூறுவதை தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், மு.க.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் "விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டு பூச்செண்டு எமோஜி போட்டுள்ளார்.

    தயா அழகிரி

    இதேபோல தயா அழகிரி நேற்று வெளியிட்ட விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியை அழகிரி ரீட்வீட் செய்துள்ளார். இந்துக்களை கவரும் நோக்கத்தில் அழகிரி இப்படி செய்து ஸ்டாலின் வாபஸ் பெற்ற அந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை நினைவுபடுத்தியுள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

    English summary
    MK Alagiri extended his Vinayagar Chaturthi greeting while MK Stalin once take back his greetings.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X