For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செப் 5-இல் பேரணி.. லைவ் ஒளிபரப்புக்கு அழகிரியின் அதிரடி பிளான்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: செப்டம்பர் 5-ஆம் தேதி பேரணி நடக்கவுள்ள நிலையில் அதை லைவாக ஒளிபரப்ப அழகிரி அதிரடி திட்டத்தை வகுத்துள்ளார்.

கருணாநிதி மரணமடைந்த சில நாட்களிலேயே கட்சி ரீதியிலான பிரச்சினையை கிளப்பினார் அழகிரி. தன் பின்னால் திமுக தொண்டர்கள் ஒரு லட்சம் பேர் வரை இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

MK Alagiri plans to live relay of his september 5 procession

மேலும் தான் திமுகவுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது என்று அவர் கேட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி கருணாநிதியின் சமாதி உள்ள மெரினா கடற்கரைக்கு செல்கிறார். தன்னுடன் அதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பர் என்று கூறியுள்ளார்.

அவரது நடைப்பயணம் திமுகவில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளதால் திமுகவின் நிர்வாகிகள் சற்று கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அழகிரியின் நடைபயணத்தை சன் டிவியும், கலைஞர் டிவியும் நேரடி ஒளிப்பரப்பு செய்யாது என்பது அழகிரி மட்டுமல்லாது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.

இதனால் தனது நடைப்பயணத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்து திமுக மத்தியில் சலசலப்பை உண்டாக பெரும் வியூகத்தை அழகிரி வகுத்து வருகிறார். அதன்படி மற்ற செய்தி சேனல்களிடம் தனது பேரணியை செப்டம்பர் 5-ஆம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் நிலவுகின்றன.

English summary
MK Alagiri plans to live relay his procession on September 5. So he talks with other tv channels, sources says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X