For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டு ஸ்டாலினை பெருமைப்படுத்திய அழகிரி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலினை ஊரணி என கிண்டல் செய்யும் அழகிரி- வீடியோ

    மதுரை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ஊரணியோடு ஒப்பிட்டார் அவரது சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி.

    திமுக தலைவர் கருணாநிதி மறைவயடுத்து, திமுகவில் தன்னை இணைத்துக்கொள்வார்கள் என எதிர்பார்த்த அழகிரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கருணாநிதி எடுத்த முடிவில் நான் மாற்றம் செய்யப்போவதில்லை. அழகிரிக்கு மீண்டும் திமுகவில் இடமில்லை என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளாராம்.

    இதையடுத்து, சென்னையிலிருந்து நேற்று மதுரைக்கு திரும்பினார் அழகிரி. மதுரை விமான நிலையத்தில், நிருபர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 5ம் தேதிக்கு பிறகு, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையை எடுப்பதாக தெரிவித்தார்.

    ஊரணியுடன் ஒப்பிட்ட அழகிரி

    ஊரணியுடன் ஒப்பிட்ட அழகிரி

    ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு இருப்பதாக பிம்பம் உள்ளதே என்ற நிருபரின் கேள்விக்கு, பேரணியை பற்றி கேட்பதாக கூறிவிட்டு, ஊரணியை பற்றி கேட்கிறீர்களே என்று அழகிரி பதில் அளிக்க அவரை சுற்றிலும், நின்ற ஆதரவாளர்கள் சிரித்தனர். இதையடுத்து, உடனே பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டு அழகிரி அங்கிருந்து சென்றார். கருணாநிதி போல ரைமிங்காக, அழகிரி பதில் அளித்தாலும், ஊரணி என்பதற்கான பொருள் என்ன என்ற கேள்வி பலரும் எழுந்துள்ளது.

    ஊரணி என்றால் என்ன

    ஊரணி என்றால் என்ன

    தானாக ஊற்றெடுக்கும், பகுதி ஊரணி என்று பேச்சுவழக்கில் கிராமங்களில் அழைக்கப்படுகிறது. குளம் போன்ற பகுதியாக இருந்தபோதிலும், வெளியே இருந்து இங்கே தண்ணீர் வந்து சேராது. தானாக ஊற்றெடுத்து தண்ணீர் அந்த குளத்தையே நிரப்பும். அதன் பெயர் ஊரணி என்பார்கள். ஊரணியில் சென்று தண்ணீர் பிடித்து தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள கிராமத்தில் குடங்களுடன் பெண்கள் அணி வகுத்து செல்வதை பார்க்க முடியும். இப்படி ஊரார் தேவையை தீர்ப்பதுதான் ஊரணி.

    வள்ளுவர் வாக்கிற்கிணங்க

    வள்ளுவர் வாக்கிற்கிணங்க

    "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" என்பது திருவள்ளுவர் வாக்கு. தோண்டத்தோண்ட தண்ணீரை தருவது மணற்கேணி. அதுபோல கற்பது அதிகரித்தால் அறிவும் அதிகரிக்கும் என்பது பொருள். இதுபோல தோண்டத்தோண்ட தண்ணீர் தருவதுதான் ஊரணியும்கூட.

    தம்பியை பெருமைப்படுத்திய அண்ணன்

    தம்பியை பெருமைப்படுத்திய அண்ணன்

    எனவே, ஸ்டாலினை கலாய்ப்பதாக நினைத்துக்கொண்டு, அழகிரி ரைமிங்காக பேசினாலும், டைமிங் ரொம்ப தப்பு. உண்மையிலேயே, ஸ்டாலினை தானாக ஊற்றெடுக்கும் ஊரணியோடு ஒப்பிட்டு அவரை சிறப்பித்துள்ளார். ஊருக்கே உதவுபவர் என்று மறைமுகமாக கூறிவிட்டார் அழகிரி. இதனால் ஸ்டாலின் ஆதரவாளர்கள் உற்சாகமாக உள்ளனர்.

    English summary
    MK Alagiri inderictely praising his brother and DMK working president MK Stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X